ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

முன்னணி நிறுவன சிஇஓ-க்களை பின்னுக்குத் தள்ளிய டிக்-டாக் பிரபலம் ! ஆண்டு வருமானம் என்ன தெரியுமா?

முன்னணி நிறுவன சிஇஓ-க்களை பின்னுக்குத் தள்ளிய டிக்-டாக் பிரபலம் ! ஆண்டு வருமானம் என்ன தெரியுமா?

கேபி லேம்

கேபி லேம்

டிக்டாக் பிரபலமான கேபி லேம் சமுக வலைத்தளத்தில் இந்திய மதிப்புப்படி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaAmerica America America

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூ-டியூப் ஆகிய தளங்களில் பிரபலமாகிவிட்டால், ஒரே ஒரு போஸ்ட்டுக்கு கோடிகளில் சம்பாதிக்கலாம். இதற்குச் சிறந்த உதாரணம் டிக்டாக் பிரபலமான கேபி லேம். இவரது சோசியல் மீடியாவில் ஒரு பதிவை ஷேர் செய்ய இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் வரை பணம் பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிக்-டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமான கேபி லேம் தற்போது ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் வரை சோசியல் மீடியாக்களில் சம்பாதித்து வருகிறார்.

சமீபத்தில் மிலன் பேஷன் வீக்கில் ராம்ப் வாக் நடக்கவும், அது சம்பந்தமான வீடியோவை டிக்-டாக்கில் பதிவிடவும், வீடியோவை TikTok இல் வெளியிடவும் லேம் சமீபத்தில் ரூ.3.58 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளார். ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் வீடியோவை டிக்-டாக்கில் பதிவிடுவதற்காக 7,50,000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.

இதன் மூலமாக கேபி லேம் சம்பாதிக்கும் வருமானம், முன்னணி நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய சில சிஇஓக்களின் ஆண்டு வருமானத்தையே முந்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

யார் இந்த கேபி லெம்?

செனகலைச் சேர்ந்த கேபி லேம், 2001ம் ஆண்டு குடும்பத்துடன் இத்தாலிக்குக் குடிபெயர்ந்தார். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்ட கேபி லேம், டுரின் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இயந்திர ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

2020ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகையே பந்தாடிய கொரோனா தொற்று, கேபி லேமின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது. லாக்டவுன் காரணமாக வேலையை இழந்தார். தன்னைப் போலவே வேலையிழந்து மன உளைச்சலில் இருப்பவர்களை மகிழ்விப்பதற்காக டிக்-டாக்கில் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார்.

Also Read : பார்வை இழக்கப்போகும் பிள்ளைகள்.. சொத்தை விற்று உலகை சுற்றிக்காட்டும் பெற்றோர் - மனதை உருக வைக்கும் சம்பவம்!

குறிப்பாக லைஃப் ஹேக்குகளை கிண்டல் செய்யக்கூடிய அவரது காமெடி வீடியோக்கள் உலகப் பிரபலமானது. நடப்பு ஆண்டின் ஜூன் மாத நிலவரப்படி 142.8 மில்லியன் பாலோயர்களைக் கொண்ட கேபி லேம், அதிக பாலோயர்களைக் கொண்ட டிக்-டாக்கர் என்ற பெருமையைப் பெற்றார். இன்ஸ்டாகிராமில் இவரை 78.3 மில்லியன் நபர்களும், ஃபேஸ்புக்கில் 1.2 மில்லியன் பேரும் பின் தொடருகின்றனர்.

தற்போது இவர் இத்தாலியின் சிவாசோ பகுதியில் நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம் போன்ற வசதிகள் உள்ள 6 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகிறார். கோடிகளில் சம்பாதித்தாலும் பணத்தைப் பெரிதாக மதிக்காதவர் என்றும், அவரது வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாது என்றும் கேபி லேமின் மேலாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Janvi
First published:

Tags: Instagram, Social media, TikTok