Home /News /trend /

புதிதாக பிறந்த குழந்தையிடம் இருந்து வியர்வை, கண்ணீர் வராதது ஏன் தெரியுமா? 

புதிதாக பிறந்த குழந்தையிடம் இருந்து வியர்வை, கண்ணீர் வராதது ஏன் தெரியுமா? 

புதிதாக பிறந்த குழந்தையிடம் இருந்து வியர்வை, கண்ணீர் வராதது ஏன் தெரியுமா? 

புதிதாக பிறந்த குழந்தையிடம் இருந்து வியர்வை, கண்ணீர் வராதது ஏன் தெரியுமா? 

புதிதாக பிறந்த குழந்தைக்கு சில மாதங்கள் வரையிலும் அழுகையின் போது கண்ணீர் வருவது கிடையாது.

    தாயின் கருவறையை விட்டு வெளியே வந்த மறுகணமே குழந்தை செய்யும் முதல் காரியம் அழுகை. அப்படி அழும் குழந்தையை உற்று பார்த்தால் நீங்கள் ஒன்றை கவனிக்கலாம். அவ்வளவு சத்தம் போட்டு அழுதும் குழந்தையின் கண்களில் இருந்து துளி கண்ணீர் கூட வந்து இருக்காது. அது ஏன் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. அதைப் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்...

    புதிதாக பிறந்த குழந்தையின் அழுகை வீட்டில் உள்ள அனைவரது முகத்திலும் புன்னகையை கொண்டு வரும். பிறந்த குழந்தை நன்றாக சத்தமிட்டு அழுவது, அது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை குறிக்கிறது. அப்படி அழும் குழந்தையை உற்று பார்த்தால் அதன் கண்களில் இருந்து கண்ணீர் வராது.

    இது பிறந்த முதல் நாள் மட்டும் கிடையாது. புதிதாக பிறந்த குழந்தைக்கு சில மாதங்கள் வரையிலும் அழுகையின் போது கண்ணீர் வருவது கிடையாது. அதற்கு காரணம் பிறந்த குழந்தைக்கு கண்ணீருக்கான சுரப்பிகள் உருவாக மேலும் சில காலம் எடுக்கும் என்பதே. துக்கம், கோபம், மகிழ்ச்சி போன்ற தீவிர உணர்ச்சிகள் ஏற்படும் போது, ​​நாம் அழுகிறோம். கண்ணீர் என்பது நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி மட்டுமல்ல, அவை கண்களைப் பாதுகாக்கவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

    கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவரான சேஜ் டிம்பர்லைன் லாக்ரிமல் சுரப்பிகள் எனப்படும் கண்ணீரை உருவாக்கும் சுரப்பிகள் முழுமையாக முதிர்ச்சியடைய இரண்டு மாதங்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கிறார்.

    ஒரு குழந்தையின் கண்ணீர் குழாய்கள் முதல் சில வாரங்கள் வரை முழுமையாக உருவாகாது. அதே சமயம் கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க தேவையான கண்ணீர் குழாய்களில் இருக்கும் என்றும், அவை கன்னத்தில் புரண்டு ஓடும் அளவிற்கு போதுமானதாக இருக்காது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    Also Read : ஒரு கையில் துப்பாக்கி, மற்றொரு கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு செல்லும் உக்ரைன் பெண்

    கண்ணீர் சுரப்பிகளைப் போலவே வியர்வை சுரப்பிகளும் குழந்தைகளுக்கு பிறந்த சில வாரங்கள் வரை முழுமையாக வளர்ச்சி அடையாது. எக்ரைன் மற்றும் அபோக்ரைன் என இருவகையான வியர்வை சுரப்பிகள் உள்ளன. பருவமடையும் போது, ​​ஹார்மோன் மாற்றங்களால் அபோக்ரைன் சுரப்பிகள் செயல்படும். அவை மயிர்க்கால்கள் வழியாக வியர்வையை வெளியேற்றும். இது ஆரம்பத்தில் மணமற்றதாகவும், எலக்ட்ரோலைட்டுகள், நீர், லிப்பிடுகள், ஸ்டெராய்டுகள் மற்றும் புரதங்களின் கலவையாகவும் இருக்கும். இவற்றின் மூலமாக பாக்டீரியாக்கள் துர்நாற்றத்தை உருவாக்கும்.

    கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில், எக்ரைன் சுரப்பிகள் வளர ஆரம்பித்து படிப்படியாக உடல் முழுவதும் விரிவடையும். இது உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் தொடங்கி ஐந்தாவது மாதத்தில் உடல் முழுவதும் வளர ஆரம்பிக்கின்றன.

    குழந்தை மருத்துவர் சேஜ் டிம்பர்லைன் கருத்து படி,பிறந்த குழந்தைக்கு மிகவும் சுறுசுறுப்பான எக்ரைன் சுரப்பிகள் நெற்றியில் இருக்கும் என்றும், அதனால் தான் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த சிறிது நேரத்தில் வியர்க்க ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Viral

    அடுத்த செய்தி