• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • டைனோசர்களுக்கு நுரையீரல் கிடையாதா? எப்படி அவை சுவாசிக்கும்? ஆய்வில் விளக்கம்!

டைனோசர்களுக்கு நுரையீரல் கிடையாதா? எப்படி அவை சுவாசிக்கும்? ஆய்வில் விளக்கம்!

இந்த உயிரினங்கள் ஹெட்டெரோடோன்டோசரஸ் சுவாசத்தின் வேறுபட்ட வழிமுறையைப் பயன்படுத்தியது என்பதை இவர்களின் கண்காணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

 • Share this:
  பண்டைய கால விலங்குகள் எவ்வாறு சுவாசிக்கின்றன என்பது பற்றிய புதிய தகவல்களை முன்வைக்க ஒரு ஆராய்ச்சிக்குழு புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு, தாங்கள் நடத்திய ஆய்வின் அறிக்கையை கடந்த வாரம் ஈ லைஃப் பத்திரிகையில் வெளியிட்டது. அதில் அவர்கள் ஒரு பழங்கால புதைபடிவத்தை ஆய்வு செய்தபின் டைனோசர்களின் சுவாச உயிரியலைப் பற்றிய அவதானிப்புகளைக் வெளிப்படுத்தியுள்ளனர்.

  ஆராய்ச்சியாளர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த நபர்கள் பற்றிய விவரங்களும் வெளியிடப்பட்டன. அதில், விக்டர் ஜே ராடர்மேக்கர் என்பவர் ஆய்வுடன் தொடர்புடைய எழுத்தாளர், வின்சென்ட் பெர்னாண்டஸ், எம்மா ஆர் ஷாச்னர், ரிச்சர்ட் ஜே பட்லர், எமீஸ் எம் போர்டி, மைக்கேல் நெய்லர் ஹட்கின்ஸ், வில்லியம் ஜே டி கிளார்க், கிம்பர்லி ஈ.ஜே. சேப்பல் மற்றும் ஜோனா என் சாய்னியர் ஆகியோர் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வுக்குழு இதுவரை கண்டிராத மிக முழுமையான டைனோசர் புதைபடிவங்களில் ஒன்றை ஸ்கேன் செய்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது ஒரு சிறிய தாவரவகை டைனோசரான ஹெட்டெரோடோன்டோசரஸ் டக்கி ஆகும். இந்த புதைப்படிவம் தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில் ஐரோப்பிய ஒத்திசைவு கதிர்வீச்சு மூலத்திலிருந்து (ESRF) பெறப்பட்ட தரவைப் பயன்படுத்தி, டைனோசர் எவ்வாறு சுவாசித்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொண்டனர். அதன் மூலம் அனைத்து டைனோசர்களிலும் நுரையீரல் இருக்கும் என்றும், பறவைகள் போலவே அவை செயல்படும் எனவும் வெளியான முந்தைய நம்பிக்கையை இந்த ஆய்வு பொய்யாக்கியுள்ளது.

  இந்த உயிரினங்கள் ஹெட்டெரோடோன்டோசரஸ் சுவாசத்தின் வேறுபட்ட வழிமுறையைப் பயன்படுத்தியது என்பதை இவர்களின் கண்காணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அழிந்துபோன அந்த விலங்கின் புதைப்படிபவத்தில் காஸ்ட்ராலியா எனப்படும் டூத்பிக் போன்ற எலும்புகள் இருந்தன. மேலும் அவற்றில் ஒரு ஜோடி ஸ்டெர்னல் எலும்புகள் மற்றும் டென்னிஸ் ராக்கெட்டுகளை போல வடிவமைக்கப்பட்ட ஸ்டெர்னல் விலா எலும்புகள் இருந்தன என்று நம்பப்படுகிறது. இந்த எலும்புகள் தான் அவை சுவாசிக்க அதன் மார்பு மற்றும் தொப்பை இரண்டையும் விரிவுபடுத்தின.

  Also read: தெருவில் சுற்றித்திரியும் நூற்றுக்கணக்கான நாய்களுக்காக வேலையை விட்ட பெங்களூரு இளைஞர்!

  இந்த எலும்பு அமைப்பு மார்பின் இயக்கத்தை அதிகரித்ததாக விஞ்ஞானிகள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இது அதிக பழமையான பறவையியல் அல்லது அழிந்துபோன தாவரவகை ஊர்வனவற்றில் மட்டுமே சாத்தியமானது என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேம்பட்ட உயிரினங்களில், இந்த உடற்கூறியல் இல்லை. எனவே சுவாச இயக்கமும் மிகவும் நவீனமானது. ஆராய்ச்சியின்படி மேம்பட்ட உயிரினங்களில் மார்பு எளிமையாக இருக்கும்போது, ​​அவற்றின் இடுப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் இவை சுவாசிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவும் நம்பப்படுகிறது.

  இந்த ஆராய்ச்சிக்காக ஆய்வு செய்யப்பட்ட இனங்கள் அனைத்தும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஜுராசிக் காலத்தின் ஆரம்பத்தில் பூமியில் வாழ்ந்த உயிரினங்கள் ஆகும். அதன் தனித்துவமான சுவாச பொறிமுறையை கண்டுபிடித்ததன் மூலம், விஞ்ஞானிகள் சுவாச உத்திகளில் உள்ள வேறுபாடுகள் விலங்குகளின் சில பரம்பரை அழிந்து போவதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று நம்பியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Esakki Raja
  First published: