ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தேனீக்கள் மனிதரை கொட்டியதும் உயிரிழக்குமா...?இது உண்மையா இல்லை கட்டுக்கதையா?

தேனீக்கள் மனிதரை கொட்டியதும் உயிரிழக்குமா...?இது உண்மையா இல்லை கட்டுக்கதையா?

கோப்புப் படம்

கோப்புப் படம்

தேனீக்கள் மனிதர்களைக் கொட்டிய பிறகு உயிரிழந்துவிடும் என்ற பழமையான நம்பிக்கை உள்ளது.  ஆனால் அது உண்மையில் உண்மையா? அல்லது அதைப்பற்றி இன்னும் நமக்குத் தெரியாத ஏதாவது இருக்கிறதா?

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தேனீக்கள் மனிதர்களைக் கொட்டிய பிறகு உயிரிழந்துவிடும் என்ற பழமையான நம்பிக்கை உள்ளது. ஆனால் அது உண்மையில் உண்மையா? அல்லது அதைப்பற்றி இன்னும் நமக்குத் தெரியாத ஏதாவது இருக்கிறதா? என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. தற்போது விஞ்ஞானிகள் மூலமாக இதற்கான விடை கிடைத்துள்ளது. வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த சுமார் 20,000 தேனீக்களைக் கொண்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் மூலமாக உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர் சிட்டியின் மூலக்கூறு உயிரியலாளர் நிக்கோலஸ் நேகர் கூறுகையில், “தேனீக்கள் பற்றி 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். உலகில் 500க்கும் மேற்பட்ட தேனீக்கள் உள்ளன. அவை மனிதர்களைக் கடிக்காது. அவற்றிற்கு கடிக்க பயன்படும் கொடுக்குகள் கிடையாது. தேனை உறிஞ்சுவதற்காக மட்டுமே குச்சி போன்ற அமைப்பு உள்ளது. இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை” என்கிறார்.

மனிதர்களை கொட்டிய பிறகு தேனீக்கு என்ன நடக்கும்?

பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு, செல்லுலார் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியலில் ஆராய்ச்சி செய்து வரும் அலிசன் ரே, ஒரு மனிதனை கொட்டிய பிறகு தேனீக்கு என்ன நடக்கும் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். தேனீக்கள் மனிதர்களையும் பூச்சிகளையும் கொட்டுகின்றன. பூச்சிகள் மெல்லிய தோலைக் கொண்டிருக்கின்றன. எனவே அது தேனீக்கள் தாக்கும் போது கொடுக்கிற்கு எந்த வித சேதத்தையும் ஏற்படுத்துவது இல்லை, ஆனால் அவை மனிதனைக் கொட்டும் போது அவற்றின் கொடுக்கு நம் தோலில் ஊடுருவி ஒட்டிக்கொள்வதால், மிகுந்த வலியை கொடுக்கிறது. அதன் உடலில் இருந்து வயிற்றில் தொடங்கி வால் முனை வரை குத்துகிறது. இதனால் தேனீக்கள் கொட்டிய பிறகு, பறந்து சென்று இறக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது அனைத்து வகை தேனீக்களுக்கும் பொருந்தாது மனிதனின் உடலில் கொடுக்குகளை பதியவிட்டுச் செல்லும் தேனீக்கள் மட்டுமே மரணத்தைச் சந்திக்கின்றன. இதற்கு காரணம் அவற்றின் உடல் உறுப்புகள் செயலிழப்பது தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், தேனீக்கள் மற்ற பூச்சிகளைத் தாக்கும் போது, ​​அத்தகைய பூச்சிகளின் தோல்கள் மெல்லியதாக இருக்கும் மற்றும் தேனீக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.ஆனால் மனிதனின் தோலில் தேனீன் கொடுக்கு சிக்கிக்கொள்வதால் அதன் உள்ளுறுப்பு செயல்பாடு செயலிழந்து, இறுதியில் மரணத்தைச் சந்திக்கின்றன.

Also see... இரவில் இரண்டு பெரிய மலை பாம்புகளுடன் தினமும் உறங்கும் வினோத மனிதர்!

ஸ்டிங்கை தனது உடலிலேயே தக்கவைத்துக் கொள்ளும் தேனீக்களுக்கு எவ்வித தீங்கும் நிகழ்வது கிடையாது. அதேபோல் கொட்டுவதற்கு பதிலாக கடிக்கும் தேனீக்களுக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஏனெனில் அவை ஸ்டிங்கை பயன்படுத்துவது இல்லை என்பதால், அது மனிதனின் தோலில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் ஏற்படுவதில்லை. இந்த ஆய்வு முடிவுகளை வைத்து பார்க்கும் போது, தேனீக்கள் நம்மைக் கொட்டிய பிறகு இறக்கின்றன என்ற கூற்று ஓரளவு மட்டுமே உண்மையோ தவிர, 100 சதவீதம் உண்மை கிடையாது என்பதை விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக தெளிவுப்படுத்தியுள்ளனர்.

First published:

Tags: Bee