ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தினமும் நூடுல்ஸ் மட்டுமே சமைச்சா எப்படி சார்..! கடுப்பான கணவன் எடுத்த தடாலடி முடிவு

தினமும் நூடுல்ஸ் மட்டுமே சமைச்சா எப்படி சார்..! கடுப்பான கணவன் எடுத்த தடாலடி முடிவு

divorce case

divorce case

Maggi Divorce Case | அவர் மனைவி காலை, மதியம் மற்றும் இரவு உணவாக மேகியையே சமைத்துள்ளார். மேலும் அந்த பெண் கடைக்கு சென்று மேகியை மட்டுமே வாங்கி வருவார் என்றும் அந்த நபர் புகார் செய்துள்ளார். நாங்கள் 'மேகி கேஸ் ' என்று குறிப்பிடும் இவ்வழக்கில் இருவரின் பரஸ்பர சம்மதத்தால் விவாகரத்து பெற்றதாக ரகுநாத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தனக்கு மனைவியுடன் வாழ பிடிக்கவில்லை என்றும், எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது என்றும் பல காரணங்களை கூறி தம்பதிகள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியிருப்பதை கேள்விப்பட்டிருக்கோம் ஆனால் ஒரு தம்பதியின் விவாகரத்திற்கு 'நூடுல்ஸ்' காரணமாக இருந்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா.? இதை கேட்கும் போதே வித்யாசமாக இருக்கிறது அல்லவா.?

ஆம் அப்படி ஒரு வழக்கை தான் விசாரித்தது குறித்து மைசூரில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.எல்.ரகுநாத் பகிர்ந்துகொண்டார். அவர் பெல்லாரியில் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது சிறிய காரணங்களுக்காக தம்பதிகள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு நாடியிருப்பதாக கூறினார்.

ஆனால் ரகுநாத் "மேகி கேஸ்" என்று குறிப்பிடும் வழக்கானது ஒரு நபர் தனது மனைவியால் மேகியை தவிர வேறு எதையும் சமைக்க முடியாது என்பதைக் கண்டறிந்த பிறகு விவாகரத்து கோரியுள்ளார். அவர் மனைவி காலை, மதியம் மற்றும் இரவு உணவாக மேகியையே சமைத்துள்ளார். மேலும் அந்த பெண் கடைக்கு சென்று மேகியை மட்டுமே வாங்கி வருவார் என்றும் அந்த நபர் புகார் செய்துள்ளார். நாங்கள் 'மேகி கேஸ் ' என்று குறிப்பிடும் இவ்வழக்கில் இருவரின் பரஸ்பர சம்மதத்தால் விவாகரத்து பெற்றதாக ரகுநாத் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக விவாகரத்து வழக்குகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன, விவாகரத்து கோருவதற்கு முன் தம்பதிகள் குறைந்தது ஒரு வருடமாவது ஒன்றாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சமரசம் மற்றும் மீண்டும் இணைவதன் மூலம் தம்பதிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு நீதிமன்றங்கள் எவ்வாறு உணர்வுப்புரமாக பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியும் அவர் பேசியுள்ளார். திருமணமாகி அடுத்த நாளே கூட விவகாரத்து கோரி நீதிமன்றத்தை தம்பதிகள் நாடியிருப்பதாக கூறியுள்ள அவர், 800 - 900 விவாகரத்து வழக்குகளில் வெறும் 20 - 30 வழக்குகளில் மட்டுமே தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என தெரிவித்துள்ளார்.

Also Read : திருமண மேடையில் ஒருவரை ஒருவர் சராமாரியாக அறைந்து கொண்ட மணமக்கள் - வைரல் வீடியோ

சமையல் என்பது ஒரு அடிப்படையான வாழ்க்கைத் திறமையாகும், அதை ஒவ்வொருவரும் தாங்கள் எப்படிச் செய்வது என்று தெரிந்து கொள்ளவேண்டும். நினைவூட்டும் வண்ணம் தெலுங்கானாவைச் சேர்ந்த நவீன் என்பவர் தனது மனைவி மட்டன் கறி சமைக்கவில்லை என்று கூறி 6 முறை 100க்கு டயல் செய்ததால், அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

கனகல் மண்டலத்தில் உள்ள செர்லா கௌராரம் கிராமத்தைச் சேர்ந்த நவீன் போன் செய்தபோது போதையில் இருந்துள்ளார். முதல் அழைப்புக்குப் பிறகு போலீசார் அவரைப் புறக்கணித்தனர், ஆனால் அவர் தொடர்ந்து ஐந்து முறை அழைத்ததால் ​​​​'டயல் 100' ஐ தவறாகப் பயன்படுத்துவது குறித்து நவீனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். எனவே ​​​​'டயல் 100' க்கு காரணம் சரியாக இல்லாமல் தொந்தரவு செய்ததாக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட நவீனை காவலில் வைத்து பிறகு எச்சரித்து வெளியேவிட்டனர்.

Also Read : இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் முதல் படம் நீங்கள் ஏன் தனிமையாக உணர்கிறீர்கள் என்பதை சொல்லும்!

நவீன் மது அருந்திவிட்டு ஆட்டிறைச்சியை வாங்கி வந்து தனது மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் போதையில் இருந்ததைக் கண்ட அவரது மனைவி அதை சமைக்க மறுத்துவிட்டார். அவர் மறுத்ததால் கோபமடைந்த அந்த நபர், தனது மனைவி மீது புகார் அளிக்க 100க்கு 6 முறை டயல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Divorce, Maggi, Trending