ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மக்கர்செய்த மெர்சிடிஸ் AMG G63... ஹெலிகாப்டர் வைத்து நொறுக்கிய யூட்யூபர்..! - வீடியோ

மக்கர்செய்த மெர்சிடிஸ் AMG G63... ஹெலிகாப்டர் வைத்து நொறுக்கிய யூட்யூபர்..! - வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

அந்த வீடியொவில் சுமார்ட் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கனவு காரை உடைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ரஷ்யாவைச் சேர்ந்த இகோர் மொராஸ் என்பவர் தான் ஆசையாக வாங்கிய மெர்சிடிஸ் எஸ்.யூ.வி காரை ஹெலிகாப்டர் வைத்து தூக்கி கீழே எறிந்து நொறுக்கியுள்ளார்.

  ரஷ்யாவைச் சேர்ந்தவர் இகோர் மொராஸ். யூட்யூபராக உள்ளார். ஆசையாக வாங்கிய மெர்சிடிஸ் காரை ஓட்டிப் பார்க்கும் போது தொழில்நுட்பக் கோளாறுகளால் கார் மக்கர் செய்துள்ளது. இதனால் கடுப்பான இகோர் தனது காரை ஹெலிகாப்டரில் தூக்கி 1,000 அடி உயரத்திலிருந்து கீழேவிட்டு நொறுக்கியுள்ளார்.

  காரை நொறுக்குவதை 7 நிமிட வீடியோவாக எடுத்த இகோர் அந்த வீடியோவில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கனவு காரை உடைப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், உள்ளூர் செய்திகளில் இகோர் தனது நண்பர் ஒருவருடன் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே காரை நொறுக்கி வீடியோவாக வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

  சுமார் 7 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ ரஷ்யாவில் வைரலாகி உள்ளது. இவ்விவகாரத்தை ரஷ்ய போலீஸார் வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

  ' isDesktop="true" id="237609" youtubeid="us3dPeONpMo" category="trend">

  மேலும் பார்க்க: வாடகைக்கு விமானம்... ₹5 லட்சம் பரிசுத் தொகை... தொலைந்த நாயைத் தேடும் பெண்!

  Published by:Rahini M
  First published:

  Tags: Mercedes-AMG G 63 SUV