3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேன் சேகரிப்பு குவளை ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு!

3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேன் சேகரிப்பு குவளை ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு!

மாதிரி படம்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நோக் கலாச்சாரத்தின் 3500 ஆண்டுகள் பழமையான குவளை ஓடுகளில் இருந்த தேன் மெழுகு எச்சங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆராய்ச்சியில் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான தேன் சேகரிக்கும் குவளையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பழமையான ஆதாரத்தின் மூலம் ஆப்ரிக்க கண்டத்தில் தேன் சேகரிக்கும் தொழில் பண்டைய காலம் முதலே கடைபிடிக்கப்பட்டு வந்தது நிரூபணமாகியுள்ளது. இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் வேதியியலாளர்களின் ஒத்துழைப்புடன் ஜெர்மனியில் உள்ள கோதே பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நோக் கலாச்சாரத்தின் 3500 ஆண்டுகள் பழமையான குவளை ஓடுகளில் இருந்த தேன் மெழுகு எச்சங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

மத்திய நைஜீரியாவில் நோக் கலாச்சாரம் கிமு1,500 முதல் பொது சகாப்தத்தின் ஆரம்பம் வரை காணப்படுகிறது. குறிப்பாக அதன் விரிவான டெரகோட்டா சிற்பங்களுக்காக இந்த கலாச்சாரம் நன்கு அறியப்படுகிறது. அப்போது வாழ்ந்த மக்கள் ஆப்பிரிக்காவின் பழமையான உருவக் கலையின் பிரதிநிதிகளாக திகழ்ந்தனர். இது குறித்து கோதேவைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ப்ரூனிக் கூறியதாவது, "அந்த தேன் அவர்களின் தினசரி உணவின் ஒரு பகுதியாக இருந்தது முற்றிலும் எதிர்பாராதது. ஆப்பிரிக்காவின் ஆரம்பகால வரலாற்றில் இப்போது வரை இந்த தேன் தொழில் தனித்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜூலி டன்னே கூறுகையில், "வரலாற்றுக்கு முந்தைய மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்ட எத்னோகிராஃபிக் தரவுகளுடன் உயிர் மூலக்கூறு தகவல்கள் இணைந்து, 3,500 ஆண்டுகளுக்கு முன்பு தேனைப் பயன்படுத்தியது பற்றிய நுண்ணறிவை எவ்வாறு தருகின்றன என்பதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு" என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கண்டுபிடிப்புகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

Also read... ராணியாக பொறுப்பேற்க மூளையை சுருக்கும் ஜம்பிங் எறும்புகள்...!

மேலும் நோக் மக்கள் வளர்ப்பு பிராணிகளை வளர்த்தார்களா என்பதை அறிய இந்த குழு தற்போது ஆய்வைத் தொடங்கியுள்ளது. ஆனால் பரிசோதிக்கப்பட்ட ஓடுகளில் மூன்றில் ஒரு பகுதி தேன் மெழுகில் இருக்கும் பொதுவான உயர் மூலக்கூறு லிப்பிட்களைக் கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். நோக் கலாச்சாரத்தின் மக்களால் பயன்படுத்தப்பட்ட தேனின் லிப்பிட்களிலிருந்து வேறு எதுவும் புனரமைக்க முடியாது என்று கூறியுள்ளனர். அநேகமாக தேன் கூடுகளை பானைகளில் வைத்து சூடாக்குவதன் மூலம் அவர்கள் கூட்டில் இருந்து தேனை பிரித்தெடுத்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.

அதேசமயம் கண்டுபிடிக்கப்பட்ட தேன் பானையில், விலங்குகள் அல்லது தாவரங்களில் இருந்து பெறப்பட்ட இறைச்சி அல்லது உணவு பொருட்கள் தேனுடன் சேர்த்து பதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அல்லது அந்த குவளைகள் இறைச்சியை உருவாக்க பயன்படுத்தப்பட்டதா என்பதும் புரியாத புதிராக உள்ளது. அதேபோல மெழுகு தொழில்நுட்பம் அல்லது மருத்துவ நோக்கங்களுக்காக அவர்கள் பணியாற்றியிருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

பாரம்பரிய ஆபிரிக்க சமூகங்களில் இன்றுவரை நடைமுறையில் உள்ளதைப் போல, களிமண் பானைகளை தேன் சேகரிப்பதற்காக பயன்படுத்துவது மற்றொரு சாத்தியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து கோதேவைச் சேர்ந்த பேராசிரியர் கதரினா நியூமன் கூறியதாவது, "ஆப்பிரிக்காவில் தேன் பயன்படுத்தும் முறை மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கண்டத்தின் மிகப் பழமையான மட்பாண்டங்கள் சுமார் 11,000 ஆண்டுகள் பழமையானவை. அதில் தேன் மெழுகு எச்சங்களும் இருக்கலாம்? ” என்றும் கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: