Home /News /trend /

ட்விட்டரில் வைரலாகும் இயக்குநர் செல்வராகவன் பதிவுகள்

ட்விட்டரில் வைரலாகும் இயக்குநர் செல்வராகவன் பதிவுகள்


இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன்

பயத்தை ஒழிக்க முடியவில்லை என்றால் அதனுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள்! இரண்டும் ஒன்றுதான் என திரைப்பட இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நான்தான் காரணம் என்று பழி போட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் பாவத்தை நாம் சுமந்தது போதும் என திரைப்பட இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை , காதல் கொண்டேன் , 7ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை , யாரடி நீ மோகினி , ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.  கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை காதல் திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

    தனது வித்தியாசமான படைப்புகளால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர். இவருக்கென ரசிகர்களும் ஏராளம். இவரது ரசிகர்கள் ட்விட்டர் செயலியிலும் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.  ட்விட்டரில் 2.6 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.

    இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து திரைப்படம் சார்ந்த புதிய தகவல்கள், ரசிகர்களுக்கு பதில் என பலவற்றை பதிவிடுவார். தற்போது சில நற்சிந்தனை கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது,

    • வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நான்தான் காரணம் என்று பழி போட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் பாவத்தை நாம் சுமந்தது போதும் !

    • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனதை குத்தி ,கிழித்து ,உடைத்து சுக்கு நூறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது

    • எதையுமே எதிர்பார்க்காது உழைக்கும் உழைப்பிற்கு தான் வெற்றி கிடைக்கும் !!

    • வாழ்க்கை முடிந்தது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார் ...வேதனை இன்றி விடியல் இல்லை..

    • இன்னொருவர் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நொடியே உங்களுக்கு குழி தோண்டப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் !!

    • கவனமாக இருங்கள் ! எதெல்லாம் உலகம் உங்களின் குறைகளாக சொல்கிறதோ அதுவே நிறைகளாக இருக்க கூடும் !

    • இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி.

    • உனக்கு நீ மட்டும்தான் துணை !

    • பயத்தை ஒழிக்க முடியவில்லை என்றால் அதனுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள்! இரண்டும் ஒன்றுதான் !

    • உங்கள் குறைகளையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் !!

    • முயற்சி சிறிதோ பெரிதோ செய்து கொண்டே இருங்கள் ! நிற்காது மலை உச்சியை நோக்கி கால்கள் ஏறுவது போல்

    • ஏமாற்றங்களை சகித்துக் கொண்டால் கவலைப் பட என்ன இருக்கின்றது?

    • உங்கள் எதிர்பார்ப்புகளை எளிதாக வைத்துக் கொண்டால் நிம்மதி நிச்சயம் !













    இவ்வாறு பல கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Selvaraghavan, Trending

    அடுத்த செய்தி