நீங்க பெரிய தோனியா? சிங்கிள் ஓட மறுத்த தினேஷ் கார்த்திக்கை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

#DineshKarthik slammed on Twitter | கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக்கும், க்ருனல் பாண்டியாவும் களத்தில் இருந்தனர். #NZvIND

நீங்க பெரிய தோனியா? சிங்கிள் ஓட மறுத்த தினேஷ் கார்த்திக்கை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். (BCCI)
  • News18
  • Last Updated: April 23, 2019, 11:48 AM IST
  • Share this:
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஓவரில் சிங்கிள் ரன் ஓட தினேஷ் கார்த்திக் சம்பவத்தை வைத்து கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுக்கின்றனர்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

அடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று நடந்த கடைசி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.


Indian Team, இந்திய அணி
இந்திய அணி தோல்வி. (BCCI)


கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக்கும், க்ருனல் பாண்டியாவும் களத்தில் இருந்தனர். முதல் பந்தில் 2 ரன்கள், இரண்டாவது பந்தில் ரன் ஏதும் இல்லை, மூன்றாவது பந்தில் ஒரு ரன் ஓடியிருக்கலாம், ஆனால் தினேஷ் கார்த்திக் ஓடவில்லை.

Dinesh karthik, தினேஷ் கார்த்திக்
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். (BCCI)
இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களியே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தானே நின்று சிக்சர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அப்படி செய்திருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தோனி போல் எப்போதும் செய்ய முடியாது என்றும் விமர்சித்துள்ளனர்.

விக்கெட் கீப்பரில் நான் தான் பெஸ்ட்! மீண்டும் நிரூபித்த தோனி; வைரல் வீடியோ!

Also Watch...

First published: February 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading