ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வறுமையில் சிக்கி தவிக்கும் 130 கோடி மக்கள் - வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் இன்று!

வறுமையில் சிக்கி தவிக்கும் 130 கோடி மக்கள் - வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் இன்று!

வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம்

வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம்

டிசம்பர் 22, 1992 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 47/196 தீர்மானத்தின் மூலம் அக்டோபர் 17 ஆம் தேதியை வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக அறிவித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது வறுமையின் உலகளாவிய பிரச்சினை, மனித உரிமைகள் மற்றும் மனித கண்ணியத்தை எவ்வாறு மீறுகிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக இருக்கிறது. வறுமையில் வாடும் மக்களின் அன்றாடப் போராட்டங்களையும் இந்த நாள் குறிக்கிறது.

வறுமையானது வீடற்ற தன்மை, பசி, அடிப்படை வசதிகள் இல்லாமை மற்றும் வன்முறை போன்ற கொடூரமான விளைவுகளைக் கொண்டுள்ளது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபை மக்கள் ஒன்று கூடி வறுமையை ஒழிக்க தங்கள் பங்கை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது.

வரலாறு

வறுமை, வன்முறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. பாரிஸில் உள்ள ட்ரோகாடெரோவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டனர். இங்குதான் 1948 இல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் கையெழுத்தானது.

டிசம்பர் 22, 1992 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 47/196 தீர்மானத்தின் மூலம் அக்டோபர் 17 ஆம் தேதியை வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக அறிவித்தது.

ஸ்டைலா, கெத்தா! பெங்களூரு வந்து இறங்கிய உலகின் பெரிய விமானம்

வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் 2022: கருப்பொருள்

வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தின் 30வது ஆண்டு நிறைவையொட்டி, இந்த ஆண்டு, ஐ.நா. வறுமையை ஒழிப்பு தினத்தின் கருப்பொருள் "நடைமுறையில் அனைவருக்கும் கண்ணியம்" என்று வைத்துள்ளது . ஒரு மனிதனின் கண்ணியம் அவரது ஒரு அடிப்படை உரிமைகளுக்கும் அடிப்படையானது. பலர் இங்கு நிலையான வறுமையில் வாழ்கின்றனர். வறுமை அவர்களின் கண்ணியம் மறுக்கப்படுவதற்கு அல்லது அவமதிக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின்படி, “வறுமையை முடிவுக்குக் கொண்டுவரவும், பூமியைப் பாதுகாக்கவும், எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து மக்களும் அமைதி மற்றும் செழிப்பை அனுபவிப்பதை உறுதிசெய்யும், உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் கீழ் நிறுவப்பட்ட 2030 நிகழ்ச்சி நிரல் பயணத்தை முடுக்கிவிடுகிறது.

தற்போதைய நிலைப்படி 130 கோடி மக்கள்  இன்னும் பல பரிமாண வறுமையில் வாழ்கிறார்கள். அவர்களில் பாதி எண்ணிக்கை குழந்தைகள் மற்றும் இளைஞர்களாக உள்ளனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Poverty, United Nation