முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சாதனைக்கு உடல் ஒரு தடை அல்ல ... கின்னஸ் சாதனை படைத்து நிரூபித்த அமெரிக்க மாற்றுத்திறனாளி

சாதனைக்கு உடல் ஒரு தடை அல்ல ... கின்னஸ் சாதனை படைத்து நிரூபித்த அமெரிக்க மாற்றுத்திறனாளி

சியோன் கிளார்க்

சியோன் கிளார்க்

இரு கால்களை இழந்த போதும் தன்னம்பிக்கையால் தனது உடலை வளர்த்துள்ளார். உடலின் கீழ் பாகம் இல்லாமல் மேல் பாகங்களை மட்டும் வைத்து சாதனை படைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சாதனைக்கு வயது ஒரு தடை அல்ல என்ற கூற்றை கடந்து கொண்டிருக்கையில் சாதனைக்கு உடலும் ஒரு தடை அல்ல என நிரூபித்து காட்டி விட்டார் மாற்றுத் திறனாளி ஒருவர்.

உலக கின்னஸ் சாதனை தங்களது முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாற்றுத்திறனாளி ஒருவர் செய்த சாதனையை பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த சியோன் கிளார்க் (Zion Clark). இவர் 4.78 செகண்டில் 20 மீட்டர் வரை தனது கைகளால் நடந்து சாதனை படைத்துள்ளார். இரு கால்களை இழந்த போதும் தன்னம்பிக்கையால் தனது உடலை வளர்த்துள்ளார். உடலின் கீழ் பாகம் இல்லாமல் மேல் பாகங்களை மட்டும் வைத்து சாதனை படைத்துள்ளார்.

Zion Clark
சியோன் கிளார்க்

இவர் ஒரு மல்யுத்த வீரர் மற்றும் சக்கர நாற்காலி பந்தய வீரர். சியோனின் குறிக்கோள், 2024ல் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தய விளையாட்டுகள் இரண்டிலும் பங்கேற்கும் முதல் அமெரிக்க தடகள வீரராக வேண்டும் என்பதே என அவரே தெரிவித்துள்ளார். இவரது வீடியோ இதுவரை யூடியூபில் 2,354,879 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

' isDesktop="true" id="570059" youtubeid="cEItmb_a20M" category="trend">

பலரும் இந்த வீடியோவின் கமெண்ட்ஸில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், மன ரீதியாக அவர் மிகவும் தைரிய சாலி எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: News On Instagram, Trending