Home /News /trend /

ஆன்லைன் பில்லுக்கும் ஹோட்டல் பில்லுக்கும் இவ்ளவு வித்தியாசமா! - அதிர்ச்சியில் ஷேர் செய்த நபர்

ஆன்லைன் பில்லுக்கும் ஹோட்டல் பில்லுக்கும் இவ்ளவு வித்தியாசமா! - அதிர்ச்சியில் ஷேர் செய்த நபர்

வைரலாகும் புகைப்படம்

வைரலாகும் புகைப்படம்

ஆன்லைன் ஆர்டர்கள் மற்றும் ஆஃப்லைன் ஆர்டர்களிலுள்ள சிக்கல்கள் பற்றி வாடிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

    நாம் சாப்பிடும் உணவுகள் நம் வீட்டு வாசலில் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் பிடித்த விஷயம் தான், ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும் நாம் விரும்பும் உணவு, அது எந்த உணவாக இருந்தாலும் சரி சூடாகவும் சுவையாகவும் சில நிமிடங்களில் நம் வீட்டு வாசலிலேயே கிடைக்கும்  ஆனால் இப்படி வாங்கும் உணவுபொருட்களின் விலையை என்றாவது நாம் சரியான விலை தான் கொடுக்கிறோமா? என்று கவனித்ததுண்டா…இல்லை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். இதை கவனித்த ஒரு வாடிக்கையாளரின் பகிர்வு தற்போது சோசியல் மீடியாவில் புயலைக் கிளப்பியுள்ளது.

    குல் கப்ரா என்பவர் Assuming Zomato ஆர்டர் ஆன்லைன் பில்லுடன், ஆஃப்லைன் ஆர்டர் பில்லை கம்பேர் செய்து அது தொடர்பான போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். இது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் உணவுகள் மும்பையில் உள்ள தி மோமோ பேக்கரியில் இருந்து பெறப்பட்டதாகவும், அதில் சைவத்தில் பிளாக் பெப்பர் சாஸ், வெஜிடபிள் பிரைட் ரைஸ் மற்றும் காளான் மோமோஸ் போன்ற உணவு வகைகளை ஆர்டர் செய்திருக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆடரின் விலை 690 என்றும் தள்ளுபடி 75 ரூபாய் போக 615 ரூபாய் எனவும் தெரியவந்துள்ளார். இதே உணவை கடைக்கு போய் நேரடியாக வாங்கினால், அதன் உண்மையான விலை 512 ரூபாய் மட்டுமே. அப்படியானால் நேரடியாக வாங்கும் விலையைவிட 113 ரூபாய் அதிகம்.



    இதேபோல்தான் இந்தூரில் swiggy வாடிக்கையாளர் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் தான் ஒரு உணவகத்திற்கு முன் இருந்தபடியே, தான் விரும்பும் உணவின் கட்டணத்தை சரி பார்த்துள்ளார். என்ன ஆச்சரியம் அந்த உணவின் உண்மையான விலை 100 ரூபாய் மட்டுமே, ஆனால் ஸ்விக்கியில் காட்டும் விலை 140 ரூபாய். 40 ரூபாய் அதிகம் என பதிவிட்டுள்ளார்.

    நீண்ட நேரம் ஃபோன் பயன்படுத்த வேண்டாம் - இப்படிக்கு செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர்

    இப்படியாக பல வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக கடைகளில் வாங்கும் உணவு வகைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். இப்படியாக ஆன்லைனில் வாங்கும் உணவுகளுக்கு எதிராக பல விதவிதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தாலும், ஆன்லைன் ஆடர்களுக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் குறிப்பிட்ட சில விஷயங்கள் டெலிவரி செலவு, எடுத்துச்செல்லும் வாகனங்களின் பெட்ரோல் கட்டணம், எடுத்து வரப்படும் சூடான உணவின் நேரம் இவை அனைத்தும் அதில் அடங்கும் அல்லவா? இதற்காகவே அந்த விலை மதிப்பு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகின்றனர். ஆன்லைனில் வாங்கும் உணவுகள் சற்று கூடுதல் விலையாக இருந்தாலும் உங்கள் நேரத்தை சேமிப்பதோடு, உங்களுக்கு பிடித்த உணவை சூடாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது.order-bill-shared-by-a-customer-sparks-debate-3128985#trendingnow
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி