ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பயணிகளிடம் ‘அழகுக் கட்டணம்’ வசூல் செய்ததா இண்டிகோ விமான நிறுவனம்.?

பயணிகளிடம் ‘அழகுக் கட்டணம்’ வசூல் செய்ததா இண்டிகோ விமான நிறுவனம்.?

indigo

indigo

IndiGo Airlines | விமான பயணத்திற்கான டிக்கெட்டுகளில் ‘Cute fee’ (அழகுக் கட்டணம்) என்ற பிரிவின் கீழ் இண்டிகோ நிறுவனம் பணம் வசூல் செய்திருப்பதாக அண்மையில் பயணி ஒருவர் கூறிய தகவலை கண்டு பலரும் குழப்பம் அடைந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சமீபத்தில் டிவிட்டரில் சாந்தனு என்ற யூசர், இண்டிகோ விமான நிறுவனத்தில் அண்மையில் தான் பயணம் செய்த போது எடுத்த டிக்கெட்டை பகிர்ந்துள்ளார். அதில், Cute fee என்ற பிரிவு இருந்ததைத் தொடர்ந்து ஒட்டுமொத்த சமூக வலைதள யூசர்களின் கவனத்தை இது ஈர்த்து வருகிறது.

இதுகுறித்து, சாந்தனுவின் பதிவில், “எத்தனை வயது ஆனாலும் நான் அழகாகத் தான் இருப்பேன் என்பது எனக்கு தெரியும். ஆனால், அதற்காக இண்டிகோ நிறுவனம் என்னிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார். டிக்கெட்டில் பயணக் கட்டணத்திற்கான பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், விமான பயண கட்டணம், சீட் கட்டணம், பாதுகாப்பு மற்றும் சௌகரிய கட்டணம் ஆகியவற்றுடன் சேர்த்து க்யூட் கட்டணம் என்ற பெயரில் ரூ.100 வசூல் செய்யப்பட்டுள்ளது.

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சாந்தனுவின் பதிவு வைரல் ஆகிய நிலையில், அதற்கு பதில் அளிக்கும் நெட்டிசன்கள் பலர் இண்டிகோ நிறுவனத்தை கடுமையாக சாடி வருகின்றனர். மற்றொரு பக்கம், கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தும் வண்ணம் ஒருசிலர் இதுகுறித்து கிண்டல் செய்து வருகின்றனர்.

சிம்ரன் வாலியா என்ற பெண் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தப் புதிய கட்டணம் காரணமாகத் தான் நானெல்லாம் இப்போது இண்டிகோ விமானங்களில் பயணம் செய்வதில்லை. ஏனென்றால் என்னுடைய அழகுக்கு அவர்கள் 20 ஆயிரம் வரை வசூல் செய்ய கூடும். அது விமானப் பயணக் கட்டணத்தை விட அதிகமானது’’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு நபர் வெளியிட்டுள்ள கமெண்டில், “யாராக இருந்தாலும், என்னைப் பார்த்து நீ அழகாக இருக்கிறாய் என்று சொன்னால் நிச்சயமாக ரூ.100 கொடுப்பேன். நானெல்லாம் யாராலும் கண்டு கொள்ளப்படாத சிங்கிள்ஸ். ஆனால், கடிகார முள் டிக், டிக் என அடிப்பதை பூதாகரமாக்கும் விமான பயணங்களுக்கு 100 ரூபாய் செலுத்த முடியாது’’ என்று கூறியுள்ளார்.

Also Read : சிசிடிவியில் சிக்கிய மர்ம உருவம்; அதிர்ச்சியூட்டும் திகில் வீடியோ.!

இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம்

நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்தது. இதுகுறித்து அவர்கள் அளித்த பதிலில், “குறிப்பிட்ட சில விமான நிலையங்களில் Cute fee வசூல் செய்யப்படுகிறது. Cute என்றால் Common User Terminal Equipment சேவைகள் என்று அர்த்தம். பயணிகளுக்கு தொடர்ந்து சேவை செய்ய விரும்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யூசர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “க்யூட் என்றால், ‘பொது பயணர் நிலைய இயந்திர கட்டணம்’ என்ற பெயரில் மெட்டல் டிடெக்டர், எஸ்கலேட்டர் போன்ற பல்வேறு விஷயங்களுக்கான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பதை சாந்தனு எழுப்பிய பிரச்சனையின் மூலமாக தெரிந்து கொண்டேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Indigo, Trending