ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

எங்களை அரெஸ்ட் பண்ணுங்க! உலகின் அழகான பெண் போலீசுக்கு ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

எங்களை அரெஸ்ட் பண்ணுங்க! உலகின் அழகான பெண் போலீசுக்கு ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

டயானா ராமிரெஸ்

டயானா ராமிரெஸ்

Trending | பார்ப்பதற்கு கிட்டத்தட்ட சூப்பர் மாடல் போல் இருக்கும் டயானாவை ஒரு போலீஸ் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அந்த அளவிற்கு போலீஸ் உடையில் கூட சூப்பர் மாடலைபோல இருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகின் மிக அழகான பெண் போலீஸ் என்று இணையவாசிகளால் கொண்டாடப்படும் பெண் உலகின் மிக ஆபத்தான நகரத்தில் ரோந்து பணிகளில் ஈடுபடுகிறார். டயானா ராமிரெஸ் என்று பெயர் கொண்டு அந்தப் பெண், கொலம்பியாவின் மெடலின் என்று நகரத்தின் தெருக்களில் ரோந்து பணியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதில் முக்கியமானது என்னவெனில் அந்த நகரம் உலகின் மோசமான, அதிக ஆபத்து நிறைந்த நகரங்களில் ஒன்றாக உள்ளது.

  ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பயமில்லாமல் இப்படி தைரியமாக அந்த ஆபத்தான பகுதிகளில் இருந்து பணியில் ஈடுபடும் டயானாவிற்கு அதிகமான ரசிகர் பட்டாளம் உண்டு. மேலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய போட்டோக்களை அப்லோட் செய்து தனது பாலோவர்களை கிரங்கடித்து வருகிறார் டயானா.
   
  View this post on Instagram

   

  A post shared by Diana Ramirez (@dianelly_17)  பார்ப்பதற்கு கிட்டத்தட்ட சூப்பர் மாடல் போல் இருக்கும் டயானாவை ஒரு போலீஸ் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அந்த அளவிற்கு போலீஸ் உடையில் கூட சூப்பர் மாடலைபோல இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் நடிகைகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் கவர்ச்சியாகவும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். மேலும் உலகின் மிக அழகான பெண் போலீஸ் என்று பாராட்டையும் பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

  Read More : கோவா கடற்கரையில் மகனுடன் பொழுதை கழிக்கும் சச்சின்.. மீன் பிடிப்பதில் ஆர்வம்!

  சமீபத்தில் நியூயார்க் போஸ்ட் ரிப்போர்டிற்கு அளித்த பேட்டியில் “எனக்கு மாடலிங்கிற்கு செல்லவோ அல்லது அழகி போட்டிகளில் கலந்து கொள்ளவோ எந்த வித ஆர்வமும் இல்லை. இப்படி போலீசாக இருப்பதையே மிகவும் விரும்புகிறேன். மேலும் பகுதி நேரமாக கூட மாடலிங் பக்கம் செல்வதற்கு எனக்கு ஆர்வம் இல்லை. ஒருவேளை என்னுடைய வாழ்க்கையை சீரமைப்பதற்கு மற்றொரு வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால், அப்போதும் நான் இந்த போலீஸ் வேலையை தேர்ந்தெடுப்பேன். எனக்கு தேவையான அனைத்தையும் அரசாங்கம் கொடுத்துள்ளது. மேலும் என்னை இந்த நிலைக்கு உயர்த்திய அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று தான் பார்க்கும் வேலையை பற்றி பெருமையாக அவர் கூறியுள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Diana Ramirez (@dianelly_17)  போலீஸ் உடையில் கூட அழகாக இருக்கும் டயானா இன்ஸ்டாகிராமில் திடீர் திடீரென்று கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் வந்து எங்களை அரஸ்ட் செய்யுங்கள்! நீங்கள் கைது செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்! என்று கமெண்ட் செக்ஷனில் ஜொள்ளுவிட்டு கொண்டிருப்பார்கள்.

  சமீபத்தில் சிறந்த போலிஸ் அல்லது மிலிட்டரி இன்ஃப்ளூவன்சர்களுக்கு அளிக்கப்படும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது டிஜிட்டல் முறையில் பல்வேறு மக்களை சென்றடையும் கண்டன்டுகளை உருவாக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் அல்லது அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஒரு விருது ஆகும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral