இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தோனி “Best Finisher” தான்! எப்படி தெரியுமா?

ICC World Cup 2019 | India vs England | MS Dhoni | வெற்றிக்கு அதிக ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது போல் சிங்கிள் விளையாடி ரசிகர்களை வெறுப்பேற்றினார்கள்

Vijay R | news18
Updated: July 1, 2019, 8:51 PM IST
இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தோனி “Best Finisher” தான்! எப்படி தெரியுமா?
IndVEng
Vijay R | news18
Updated: July 1, 2019, 8:51 PM IST
மகேந்திர சிங் தோனி இறுதி ஓவர்களில் ஸ்லோவாக ரன் சேர்பதாக மீண்டும் அவர் மீது பல விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இணையத்தில் நெட்டிசன்கள் பலர் அவரின் ஆட்டத்தை கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.

உலகக் கோப்பை தொடரின் 38-வது லீக் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து  6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்களை பறிகொடுத்து 306 ரன்கள் மட்டுமே சேர்த்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நேற்றைய போட்டியில் தோனி 31 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இறுதி ஓவர்களில் தோனியும் - கேதர் ஜாதவும் 31 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சற்று அதிரடியாக ஆடி தோற்றிருந்தால் கூட மனஆறுதலாக இருந்திருக்கும் அதற்கான முயற்சயில் அவர்கள் ஈடுபடவே இல்லை.


வெற்றிக்கு அதிக ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது போல் சிங்கிள் விளையாடி ரசிகர்களை வெறுப்பேற்றினார்கள். இவர்களின் ஆட்டத்தை பார்த்து விரக்தியடைந்த இந்திய ரசிகர்கள் பலர் போட்டி முடிவதற்கு முன்பே மைதானத்தை காலி செய்து கிளம்பினர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இவர்கள் இருவரும் மந்தமாக விளையாடியது கடுமையான விமர்சனத்தைக் கிளப்பியது.

தற்போது தோனி மீதான விமர்சனங்களும், கிண்டல்களும் இணையத்தில் அதிகமாக பரவிவருகிறது. தோனி மீது இருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்டோம் என பலர் வேதனை தெரிவித்துள்ளனர். தோனியை ட்விட்டரில் விமர்சித்த ரசிகர்கள் பலர், தோனி 'best finisher' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ஆம், பாகிஸ்தானின் சோலியை முடித்து வைத்துவிட்டார் என கேலியாக பதிவு செய்து வருகின்றனர்.Loading...


இது ஒருபுறம் இருக்க இவர்களுக்கு சரிக்கு சமமாக தோனி ரசிகர்கள் என்றும்தலதோணி என்ற ஹஸ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர். தோனி ஒருவர் தான் விளையாடமால் இருந்தது போல் சொல்ல கூடாது. முதல் 10 ஓவரில் இந்திய அணி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஓரிரு போட்டியில் தோனி விளையாடமல் இருந்து அவரை டிரொல் செய்வது சரியல்ல என அவரது ரசிகர்கள் கொதிப்பில் உள்ளனர்.

Also Watch 
First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...