மனைவி அனுஷ்காவின் பிரசவத்துக்காக விடுப்பு எடுக்கும் விராட் கோஹ்லி : தோனியுடன் ஒப்பிட்டு விமர்சிக்கும் ரசிகர்கள்..

மனைவி அனுஷ்காவின் பிரசவத்துக்காக விடுப்பு எடுக்கும் விராட் கோஹ்லி : தோனியுடன் ஒப்பிட்டு விமர்சிக்கும் ரசிகர்கள்..

மனைவியுடன் விராட்கோலி

விராட் கோலி தனது மனைவிக்காக ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது விடுப்பு எடுப்பதற்கு இணையத்தில் விமர்சங்கள் எழுந்து வருகின்றன. தோனி தனது மகள் பிறக்கும் பொழுது உலக கோப்பை தொடரை விளையாடியதும் பலரது கவனத்தை தற்போது ஈர்த்து வருகின்றது.

  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடருக்கு அடுத்ததாக இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 27-ஆம் தேதி சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகிறது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருப்பார். டெஸ்ட் தொடரில் முதல் போட்டியுடன் கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்ப உள்ளார். இதனால் ரோஹித் சர்மா மற்ற 3 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலி கலந்து கொள்ள மாட்டார் என ஏற்கனவே பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

ALSO READ |  உங்களுக்கு மனச்சோர்வை உண்டாக்குகிறதா சோஷியல் மீடியாக்கள்? பாதிப்பை தவிர்க்கும் வழிகள் என்ன?

கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவின் முதல் பிரசவத்திற்காக அவர் இந்தியா திரும்புகிறார். இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் "அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்டுக்குப் பிறகு இந்தியா திரும்புவதற்கான தனது திட்டங்கள் குறித்து விராட் கோலி பிசிசிஐக்கு அறிவித்திருந்தார். இதையடுத்து பிசிசிஐ இந்திய கேப்டனுக்கு தந்தைவழி விடுப்பு வழங்கியுள்ளது.

எனவே, அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவர் திரும்புவார்" என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் இருவிதமான விமர்சனங்கள் எழுந்தன. தனது வாழ்க்கையில் மிகவும் தனிப்பட்ட வளர்ச்சியை சந்திக்கும் நேரத்தில் தனது குடும்பத்திற்கு முன்னுரிமை அளித்ததற்காக விராட் கோலியை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் இந்த செய்தியை பகிர்ந்துகொண்ட, வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கிரிக்கெட் வீரர் கோலிக்கு பாராட்டு தெரிவித்தார். அதே நேரத்தில் கோலி இல்லாத நிலையில் சுற்றுப்பயணம் கடுமையானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். அவரது பதிவிற்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

சிலர் இணையத்தில் விராட் கோலி தனது கடமைக்கு மாறாக குடும்பத்தை தேர்ந்து எடுத்து விட்டதாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு உலகக் கோப்பையில் மகேந்திர சிங் தோனி இந்தியாவை வழிநடத்திய போது, அவரது மனைவி சாக்ஷி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த சமயத்தில் தோனி தனது மனைவியுடன் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் இறுதி ஆட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, பிப்ரவரி 6-ஆம் தேதியன்று ஸிவா பிறந்தார்.

ஸிவா பிறந்த நேரத்தில், தோனி இந்தியாவில் இருப்பதைத் தவறவிட்டாரா என்று ஊடகங்களால் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, "உண்மையில் இல்லை. இப்போதைக்கு நான் தேசிய கடமைகளில் இருக்கிறேன். அதனால் பிற எல்லாவற்றிற்கும் காத்திருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். உலகக் கோப்பை ஒரு மிக முக்கியமான போட்டி ஆகும்." என தெரிவித்திருந்தார். கேப்டன் கூல் கூறிய கருத்துக்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.மறுபுறம் கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
கோலி குறித்த தனது ட்வீட்டில் ஏராளமான பதில்களை பெற்றதும், போக்லே மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "கோஹ்லியின் முடிவுக்கு பல எதிர்வினைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆம், அவர் ஒரு சிறந்த வீரர் என்பதால் சுற்றுப்பயணம் கடினமாகிவிடும், ஆனால் அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும். பெற்றோராக மாறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

 
Published by:Sankaravadivoo G
First published: