Home /News /trend /

கழிவறை சுத்தம் செய்து தருவீர்களா? நெட்டிசன் கேள்விக்கு அசத்தலான பதில் அளித்த தருமபுரி எம்.பி

கழிவறை சுத்தம் செய்து தருவீர்களா? நெட்டிசன் கேள்விக்கு அசத்தலான பதில் அளித்த தருமபுரி எம்.பி

செந்தில்குமார் எம்.பி.

செந்தில்குமார் எம்.பி.

தெருவிளக்கு பிரச்னை தொடர்பாக அளித்த புகார் சரிசெய்யப்பட்டது என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் தருமபுரி தொகுதி தி.மு.க எம்.பி செந்தில்குமார் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

  • News18
  • Last Updated :
கழிவறை சுத்தம் செய்து தருகிறீர்களா? என்று நக்கலாக கேள்வி எழுப்பிய நெட்டிசனுக்கு தருமபுரி எம்.பி செந்தில்குமார் தன்மையாக பதிலளித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள தெருவிளக்கு பிரச்னை தொடர்பாக அளித்த புகார் சரிசெய்யப்பட்டது என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் தருமபுரி தொகுதி தி.மு.க எம்.பி செந்தில்குமார் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவந்தனர்.

அதில், பாத்ரூம் சாலரம் அடச்சுன்ருக்கு, வந்து சத்த கிளின்பன்றேலா... என்று பழனி என்பவர் நக்கலாக பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த செந்தில்குமார், ‘இதில் என்ன இருக்கு பழனி, எங்கே என்று சொல்லுங்கள். நானே நேரில் வந்து சரி செய்து தருகிறேன்.

இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல. புனிதமான செயல்தான்’ என்று பதிலளித்தார். செந்தில் குமாரின் தன்மையான பதிலுக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.



Also see:

Published by:Karthick S
First published:

Tags: Dharmapuri

அடுத்த செய்தி