'தி க்ரே மேன்' படத்தில் நடிகர் தனுஷ்... டிரெண்ட் செய்து கொண்டாடும் ரசிகர்கள்

ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த தனுஷ்

பிரபல ஹாலிவுட் நடிகர்களுடன் தனுஷ் இணைந்து நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ரசிகர்கள் இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

 • Share this:
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாது பாலிவுட் படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். ராஞ்சனா, சமிதாப் , அட்ராங்கி ரே என பாலிவுட் படங்களில் ஆர்வம் காட்டிய தனுஷ் ஹாலிவுட் படங்களையும் விட்டு வைக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு அவர் தொட்டு பார்த்த படம் தான் ‘the extraordinary journey of fakir ' .

  இதை தொடர்ந்து அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குநரான ருஸ்ஸோ இயக்கத்தில் ‘க்ரே மேன்’ என்ற படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.ஆக்‌ஷன் த்ரில்லர் ஆக உருவாக இருக்கும் இந்த படம் மார்க் க்ரேனேவின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகிறது.

  இதில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் #Dhanush என்ற டேகில் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

   

   

      

      

      

      

      

      

      

      

      

  எனக்கு ராஜாவானா வாழுறேன், எதுவும் இல்லேன்னாலும் ஆளுறேன் என தனுஷ் பாடிய பாடலின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

     தனுஷ் குறித்த மீம்ஸ் ஒன்றையும் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

   

      

      

      

  பிலிவர் சாங் தெரியாதோர் எவரும் இலர். பலரை வெறி ஏற்றவும், உற்சாக படுத்தவும், கொண்டாடவும் இந்த பாடலை இணையவாசிகள் பயன்படுத்துவரர். இந்த பாடலை எடிட் செய்து ஒருவர் பதிவிட்டுள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: