Home /News /trend /

ராஜஸ்தான் கோயிலுக்கு துடைப்பத்தை காணிக்கையாக தரும் பக்தர்கள்... ஏன் தெரியுமா?

ராஜஸ்தான் கோயிலுக்கு துடைப்பத்தை காணிக்கையாக தரும் பக்தர்கள்... ஏன் தெரியுமா?

சத்தா தாதா கோவில்

சத்தா தாதா கோவில்

Trending | சத்தா தாதா கோவிலில் பிரார்த்தனை செய்து, பின்னர் துடைப்பம் கொண்டு கோவில் வளாகத்தை சுத்தம் செய்தால், படர்தாமரை மற்றும் சிரங்கு போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Rajasthan, India
  இந்தியா கோயில்கள் மற்றும் புனிதமான மத தலங்களைக் கொண்ட புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், ஜென், சீக்கியர்கள் என அனைத்து சமயத்தினருக்கும் புண்ணிய தலங்களும், வழிபாட்டு முறைகளும் இங்குள்ளன. குறிப்பாக இந்துக்களின் முறைப்படி தனக்கு பிடித்த இஷ்ட தெய்வம் வேண்டுதலை நிறைவேற்றினால் காணிக்கை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். காசு, வெள்ளி, பொன், வெண்கல சிலை, பழங்கள், தானியங்கள், விலங்குகள் ஆகியவற்றை காணிக்கை செலுத்தி பார்த்திருப்போம்.

  ஆனால் ராஜஸ்தானில் உள்ள கோயில் ஒன்றிற்கு பக்தர்கள் துடைப்பத்தை காணிக்கையாக செலுத்தும் வித்தியாசமான வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இதற்கு பின்னால் உள்ள கதையும் மிகவும் சுவாரஸ்யமானதாக உள்ளது. சத்தா தாதா கோவில் பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ராஜஸ்தானின் சிராவா அருகே உள்ள ஓஜ்டு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் இரண்டு சகோதரர்களுக்கு இடையிலான அன்பின் தனித்துவமான கதையைச் சொல்கிறது. அண்ணன் இறந்த பிறகு, அண்ணன் எரியும் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தம்பியின் பாசம் தான் இப்படியொரு கோயில் உருவாக காரணமாக அமைந்துள்ளது.

  மேலும், இந்த கோயில் வாசலில் பிரசாதத்துடன் துடைப்பத்தையும் கொடுத்தால் மக்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதுவே சத்தா தாதா கோவில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. நகரங்களை விட கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து துடைப்பத்தை காணிக்கையாக கொடுத்து சத்தா தாதாவை வணங்கிச் செல்கின்றனர்.

  Read More : ஆசையாக கட்டிய வீட்டை இடிப்பதா? அஸ்திவாரத்தோடு அலேக்காக வீட்டை நகர்த்தும் முயற்சியில் விவசாயி


  முன்பே குறிப்பிட்டது போல இந்த கோயிலுக்கு ஒரு தனிக் கதை உண்டு. அதாவது, 550 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த ஜாட் சாதியைச் சேர்ந்த இரு சகோதரர்களிடையே ஆழ்ந்த பாசம் இருந்ததாக ஓஜ்துவில் ஒரு புராணக்கதை உள்ளது. ஆனால் ஒரு நாள் நோய்வாய்ப்பட்ட அண்ணன் இறந்து போயுள்ளார். அப்போது அண்ணனை குணப்படுத்துவதற்காக மருந்து தேடிச் சென்ற தம்பி, தனது அண்ணன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அவர் உடல் சிதையூட்டப்பட்ட நெருப்பில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

  சத்தா தாதா கோவிலில் பிரார்த்தனை செய்து, பின்னர் துடைப்பம் கொண்டு கோவில் வளாகத்தை சுத்தம் செய்தால், படர்தாமரை மற்றும் சிரங்கு போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.

  சஹாப்ராம் மற்றும் ரூர்பக்ஷின் கதை:

  சகோதரர்கள் சஹப்ராம் மற்றும் ரூர்பக்ஷ் இருவரும் திருமணமாகாதவர்கள். சஹாப்ராம் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, ​​ரூர்பக்ஷ் தனது சிகிச்சைக்காக மருத்துவ மூலிகைகளை எடுத்து வருவதற்காக நாரஹாவிடம் சென்றுள்ளார். ரூர்பக்ஷ் பாதி தூரத்தை மட்டுமே கடந்தபோது, ​​அவர் பயணித்த குதிரை அதற்கு மேல் செல்லாமல் நின்றது. பலமுறை முயன்றும் குதிரை முன்னோக்கி நகராமல் கிராமத்தை நோக்கித் திரும்பியது. இதிலிருந்து, வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்த ரூர்பக்ஷா, கிராமத்திற்கு திரும்ப முடிவெடுத்துள்ளார்.

  ஆனால் ரூர்பக்‌ஷா வர நேரம் ஆகும் என நினைத்த கிராம மக்கள் அவர்களே சஹப்ராமின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளனர். ஆனால் கிராமத்திற்கு திரும்பிய போது அண்ணன் சஹப்ராம் உயிரிழந்ததை அறிந்து ரூர்பக்‌ஷா, தானும் அவர் உடல் எரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது குதித்து உயிர் தியாகம் செய்தார். இப்படியொரு அண்ணன் - தம்பி பாசத்தை எங்குமே கேள்விப்படாத கிராம மக்கள் அவர்களுக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

   
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Rajasthan, Trending, Viral

  அடுத்த செய்தி