என்னோட வாகனத்தையே நிறுத்துவீங்களா? சுங்கச்சாவடியில் அடாவடி செய்த ஆளுங்கட்சி பெண் பிரமுகர்

Youtube Video

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெண் பிரமுகர் டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் அடாவடியாக தடுப்புகளை தள்ளிவிட்டு , ஊழியர்களை தாக்கிவிட்டு வாகனத்தை எடுத்து செல்லும் காட்சி...

 • Share this:
  ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் காஜா சுங்கச்சாவடியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  ரேவதி என்பவர் காரில் சுங்கச்சாவடியை கடக்க முயன்றார். அவரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டு வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

  இதனால் ஆத்திரமடைந்த ரேவதி, ஊழியர்களை சரமாரியாக திட்டியதுடன், தடுப்புகளை ஏற்படுத்திய ஊழியர்களில் ஒருவரின் கன்னத்தில் அடித்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.  மக்களின் பிரதிநிதியாக, தனது வாகனம் முதலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ரேவதி, சண்டையிட்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
  Published by:Sankaravadivoo G
  First published: