ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கோலாகலமாக நடைபெறவிருக்கும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம்

கோலாகலமாக நடைபெறவிருக்கும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்

நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் இருவரது உடைகளும் அதிக கவனம்பெறும் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் - ராதிகா மெர்ச்செண்ட் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சண்ட் மற்றும் ஷைலா மெர்ச்சண்ட் ஆகியோரின் மகள் தான் ராதிகா மெர்ச்செண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இருவது நிச்சயதார்த்தமும் இன்று நடைபெறவிருக்கிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ஆண்டிலா இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிச்சயதார்த்தத்திற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியின் ஆண்டிலா இல்லம்

முன்னதாக ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு சமீபத்தில் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த லெஹங்கா அனைவரையும் கவர்ந்த்தது. இதனை பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்திருந்தார்.

மேலும் கடந்த இரு நாட்களாக ராதிகாவின் உடை மட்டுமல்லாமல் அவர் அணிந்திருந்த நீளமான ஹெவி நெக்லஸ், நெற்றிச்சுட்டி, ஜிமிக்கி, மோதிரங்கள் என அனைத்தும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் இருவரது உடைகளும் அதிக கவனம்பெறும் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Marriage, Mukesh ambani, Tamil News