வெறும் குச்சிகள் மற்றும் நூலை வைத்து தாடியை ஷேவ் செய்த முதியவர் - வைரலாகும் வீடியோ!

வெறும் குச்சிகள் மற்றும் நூலை வைத்து தாடியை ஷேவ் செய்த முதியவர் - வைரலாகும் வீடியோ!

முதியவர்

ஒரு வயதான மனிதர் தனது தாடியை ஷேவ் செய்ய ஸ்மார்ட் ஐடியாவை பயன்படுத்திய வீடியோ ஒன்று சமீபத்தில் பயங்கர வைரலானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில், எந்தவொரு சூழ்நிலைக்கும் விரைவான தீர்வைக் காண்பதற்கான மிகவும் பொதுவான வழி அணுகுமுறை தான். பொழுதுபோக்குகள் முதல் அன்றாட வேலை வரை நீங்கள் நிராகரிக்க விரும்பாத எந்தவொரு நன்மை தரக்கூடிய விஷயங்களையும் வாழ்க்கையில் தொடர அணுகுமுறை ஒரு முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஒரு விஷயத்தை எவ்வாறு புதுமையாகவும், வித்தியாசமாகவும் செய்யலாம் என்பதை நமது அணுகுமுறை தீர்மானிக்கிறது.

அதன்படி ஒரு வயதான மனிதர் தனது தாடியை ஷேவ் செய்ய ஸ்மார்ட் ஐடியாவை பயன்படுத்திய வீடியோ ஒன்று சமீபத்தில் பயங்கர வைரலானது. அதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் ரேசரை மெஷின் வைத்து ஷேவிங் செய்யவில்லை என்பது தான். தனியார் பத்திரிகையில் வெளியான தகவலின்படி, ஒரு வயதான மனிதர் தனது தாடியை DIY (Do It Yourself) ரேஸர் மூலம் ஷேவ் செய்வதைக் காணலாம். அவர் குச்சிகள் மற்றும் நூல் கொண்டு ரேசர் போன்ற ஒரு கருவியை உருவாக்கியுள்ளார். இரண்டு சிறிய குச்சிகள் ஒரு பக்கம் மட்டும் சேர்ந்தபடி வி வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

குச்சிகள் இணைக்கப்படாத பக்கத்தில் நூல்கள் கொண்டு ஒரு ரேசரை அவரே தயாரித்திருந்தார். பொதுவாக ஷேவிங் செய்ய ரேஸரில் பிளேடுகள் இருக்கும். ஆனால் இவரது ரேஸரில் பிளாட்டுகளுக்கு பதிலாக நூல் பல அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த நூல் ரேசரை வைத்து முதியவர் உண்மையாகவே தனது தாடியை சேவ் செய்து கொண்டார். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது. மேலும் அந்த முதியவர் குறித்து எந்த விவரங்களும் தெரியவில்லை. இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பிளேடுகள் உதவி இல்லாமல் அந்த மனிதர் ஷேவ் செய்துகொண்டதை கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர். இருப்பினும், இந்த நுட்பமும் புதுமையும் முற்றிலும் புதியவை என்றாலும், இதுபோன்ற அணுகுமுறை இந்தியர்களுக்கு புதிதல்ல.இதேபோல, மற்றொரு வீடியோவில் ஒரு முதியவர் ஒருவர் சொந்தமாக ஹேர்கட் செய்வது எப்படி என்பதை சொல்லி தந்தார். கிளிப்பின் சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், அவர் தலைமுடியை வெட்டிக்கொள்ள டிரிம்மரையோ அல்லது கத்தரிக்கோலையோ பயன்படுத்தவில்லை. முதலில், அவர் ஹேர்கட் செய்து கொள்வதற்கு முன்பு தன்மேல் அணிந்துக்கொள்ள நியூஸ் பேப்பரில் ஒரு கவசத்தை தயாரித்தார். பின்னர் எந்த கருவிகளை கொண்டு ஹேர்கட் செய்கிறார் என்பதை காண்பித்தார்.அதில் ஒரு சீப்பு, பிளேடு மற்றும் ஒரு காகித கிளிப் மூலம் ஹேர்கட் செய்யப்போவதாக தெரிவித்தார். இந்த வைரல் வீடியோவில், கிளிப்பின் உதவியுடன் சீப்பையும் பிளேடையும் இணைத்துள்ளார். பின்னர் பிளேடு இணைக்கப்பட்ட சீப்பை வைத்து தலைமுடியை சீவினார். பின்னர் நீளமாக வளர்ந்த முடிகள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன. தனது முடி எவ்வாறு நன்கு வெட்டப்பட்டது என்பதையும் அவர் அந்த வீடியோவில் தனது பாலோவர்ஸ்களுக்கு காண்பித்தார்.

Also read... 72 ஆண்டுகால திருமண வாழ்க்கை... 100 வயது தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் இந்த வீடியோக்கள் வைரலானது. அந்த சமயத்தில் அனைத்து கடைகள் மற்றும் வணிகங்களும் மூடப்பட்டன. அப்போது, சலூன்கள் இல்லாததால் பலர் தங்கள் முடியை வெட்ட முடியாமல் அவதியுற்றனர். அந்த சமயங்களில் வீட்டிலேயே முடி வெட்டும் பல வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: