பல நாள் திருடன்... மகன் பர்சில் இருந்த 5 ஆணுறைகளை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி... அடுத்து நடந்தது?

பல நாள் திருடன்... மகன் பர்சில் இருந்த 5 ஆணுறைகளை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி... அடுத்து நடந்தது?

மாதிரி படம்

மகனின் பர்சில் இருந்து 5 ஆணுறைகள் கண்டெடுத்த பெற்றோர் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
பெற்றோருக்கு தெரியாமல் தவறு செய்கிற, ஒவ்வொரு மகனுக்கும் ஒருநாள் பெற்றோரிடம் மாட்டிகொள்வோம் என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் அது கனவாக வந்தும் அச்சுறுத்தும். அப்படியான ஒரு இக்கட்டான நிலையை சந்தித்தது குறித்து ஹர்ஷ் மிட்டல் என்ற இளைஞர் டிவிட்டரில் எழுதியிருக்கிறார். ஹர்ஷ் மிட்டலின் துணிகளை வீட்டில் இருந்த அம்மா வாஷிங்மெஷின் மூலம் துவைத்து இருக்கின்றார். பின்னர் அதனை உலற வைப்பதற்கு எடுத்தபோது, அவருடைய ஒரு பேன்டில் மணிபர்ஷ் இருந்துள்ளது.

அதனை திறந்துபார்த்தபோது 3 நிறுவனங்களினுடைய 5 ஆணுறைகள் இருந்துள்ளன. ஆணுறைகளை பார்த்த ஹர்ஷ் மிட்டலின் பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த ஆணுறைகளையும் காயவைத்துள்ளனர். வழக்கம்போல் வீடு திரும்பிய ஹர்ஷ், பெற்றோர்களை பார்க்கும்போது அவர்களின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்துள்ளது. திடீரென ஹர்ஷின் அம்மா, துணி துவைக்கும்போது பேன்டில் இருந்து சிலவற்றை கண்டதாகவும், அதனை எடுத்து தந்தை மாடியில் வெயிலில் காயவைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்ட ஹர்ஷூக்கு வியர்த்து விறுவிறுத்துள்ளது. வசமாக மாட்டிக்கொண்டோம் என உணர்ந்து கொண்ட ஹர்ஷ் மிட்டல், தந்தையிடம் சென்றுள்ளார்.

அப்போது, கடும் கோபத்தில் இருந்த அவர், ஹர்ஷை சரமாரியாக வசைபாடியதுடன், அந்த சூழலை தனக்கு சாதகமாகவும் பயன்படுத்தியுள்ளார். பேன்டில் இருந்த ஆணுறைகள் குறித்து வினவிய அவர், 'திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்தது எதற்காக என்பது புரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், காலை உணவருந்த சென்றபோது அம்மாவின் முகத்தில் கோபக்கனல் தெரிந்ததாக கூறியுள்ள ஹர்ஷ் மிட்டல், இந்த அசௌகரியமான சூழலில் சகோதரர் முதல் நண்பர்கள் வரை யாரும் உதவவில்லை என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது, இந்த நிகழ்வால் நான் மிகவும் நான் மனம் வந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்ஷ் மிட்டல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை டிவிட்டரில் வெளிப்படையாக பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹர்ஷ் மிட்டலின் நிலையை எண்ணி இணையவாசிகள் பலரும் கிண்டலடித்துள்ளனர். ஒரு சிலர், தங்களுக்கு இப்படி ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதையும் பதிவிட்டுள்ளனர். ஒரு சிலர் வேடிக்கையான கமெண்ட்ஸ்களையும் ஷேர் செய்துள்ளனர். மேலும் பலர் பாலியல் கல்வியை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்றும், பெற்றோர் மற்றும் பிள்ளைகளிடையே பாலியல் விஷயங்கள் தொடர்பான உரையாடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Vijay R
First published: