• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பட்ட பகலில் சைக்கிள் திருட்டு - வீடியோவை வைரலாக்கிய நெட்டிசன்கள்

பட்ட பகலில் சைக்கிள் திருட்டு - வீடியோவை வைரலாக்கிய நெட்டிசன்கள்

பட்ட பகலில் சைக்கிளை திருட முயன்று திருடன்

பட்ட பகலில் சைக்கிளை திருட முயன்று திருடன்

அங்கிருந்த சிசிடிவியில் சிக்காதபடி அந்த திருடன் திருடி உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காவல் துறைக்கு இந்த திருட்டு சம்பவத்தை கண்டறிவதில் மிக சவாலாக இருந்துள்ளது.

  • Share this:
நெட்டிசன்கள் கையில் எதாவது ஒரு கன்டென்ட் சிக்கி விட்டால் போதும் அதையே 1 வாரத்திற்கு வைத்து செய்வார்கள். இதே போன்ற ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் மிக சாதாரணமாக ஒரு வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சைக்கிளை திருட முயன்றபோது சிக்கிக்கொண்ட திருடனின் வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் எடிட் செய்து வைரலாக்கி உள்ளனர்.

இதன் சிசிடிவி வீடியோவில் ஒரு நபர் மொபைலை நொண்டிக் கொண்டே திறந்திருந்த வீட்டின் உள்ளே நுழைந்து அங்கிருந்த சைக்கிளை தூக்க முயல்கிறார். பிறகு ஒரு வழியாக அதை தூக்கி கொண்டே வெளியே செல்கிறார். உடனே அந்த வீட்டின் உரிமையாளர் அவர் பின்னாடியே சென்று சைக்கிளை அவரிடம் இருந்து மீட்டு வருகிறார். வீட்டிற்கு வெளியில் நடந்த சில நிமிட காட்சிகள் மட்டும் இந்த பதிவில் வெளியாகவில்லை.

எப்படியும் அந்த திருடனுக்கு தர்ம அடி விழுந்திருக்கும். வீடியோவில் உள்ள பகுதிகளை வைத்து பார்க்கும்போது இது இந்தியாவில் நடந்துள்ளது போன்று இருக்கிறது. இந்த சிசிடிவி வீடியோ எதர்ச்சையாக நெட்டிசன்கள் கைகளில் சிக்கிவிட்டது. உடனே இதை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் செய்து விட்டனர். அந்த எடிட் செய்த வீடியோவில் 'கேசோலினா' என்கிற புகழ்பெற்ற பாடலை பின்னணி பாடலாக சேர்த்துள்ளனர்.

இத்துடன் சில மீம் டெம்பிளேட் வீடியோக்களையும் இணைத்து எடிட் செய்துள்ளனர். இந்த வீடியோவை பல ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.இதே போன்ற ஒரு காமெடியான திருட்டு சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அகமதாபாத்தில் நடந்துள்ளது. அதில் திருடுவதற்காவே 10 கிலோ வரை அந்த திருடன் தனது உடல் எடையை குறைத்துள்ளான். போபாலில் பாசன்ட் பஹார் சொசைட்டியில் மோஹித் மராட்டியா என்பவர் வீட்டில் 34 வயது மோதி சிங் வேலை பார்த்து வந்துள்ளார்.

Also read... இப்படி தான்... புரிஞ்சுதா? குழந்தைக்கு தவழ கற்று கொடுத்த நாய் - வைரலாகும் வீடியோ!

அந்த வீட்டில் எந்த அறையில் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும், எங்கு சிசிடிவி உள்ளது போன்ற தகவல்களை அந்த திருடன் அறிந்து கொண்டான். ஆனால் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் எலக்ட்ரானிக் கதவாக அமைந்திருந்தது. எனவே சாதாரண முறையில் அங்கு திருட முடியாது என்பதற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்து கொண்டு, கிட்சனில் இருந்த கண்ணாடியிலான ஜன்னலை அறுத்து அதன் வழியாக சென்று 37 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி உள்ளான்.

அங்கிருந்த சிசிடிவியில் சிக்காதபடி அந்த திருடன் திருடி உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காவல் துறைக்கு இந்த திருட்டு சம்பவத்தை கண்டறிவதில் மிக சவாலாக இருந்துள்ளது. சில கால விசாரணைக்கு பிறகு அந்த வீட்டில் வேலை செய்த மோதி சிங் பக்கத்தில் இருந்த கடையில் சா பிளேடு மற்றும் திருடுவதற்கு ஏற்ற சில பொருட்கள் வாங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் விசாரிக்கும்போது தான் அந்த திருடன் தினமும் 1 வேளை உணவு மட்டுமே எடுத்து வந்திருக்கிறான் என்கிற திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அதுவும் திருடுவதற்காக சாதூரியமான முறையில் தனது உடல் எடையை குறைத்து அவன் திருடி உள்ளான் என்று பிறகு கண்டறிந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: