Home /News /trend /

மணமேடையிலேயே தூங்கிய மணமகன்... தட்டி எழுப்பும் உறவினர்கள் - வைரலாகும் வீடியோ!

மணமேடையிலேயே தூங்கிய மணமகன்... தட்டி எழுப்பும் உறவினர்கள் - வைரலாகும் வீடியோ!

மணமேடையிலேயே தூங்கிய மணமகன்

மணமேடையிலேயே தூங்கிய மணமகன்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே மேடையில் அமர்ந்தபடி மணமகன் தூங்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் வினோதமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் மக்களை வெகுவாக கவர்ந்து வருவதால் இணைய ஸ்க்ரோலிங் பரவலாக அதிகரித்துள்ளது. அதாவது, மக்கள் அதிகளவு இணையத்தில் மூழ்கியுள்ளனர். இதன் காரணமாக எண்ணற்ற வீடியோக்கள் உலகளவில் வைரலாகி வருகிறது. மேலும் திருமண விழாக்களில் நடக்கும் சில சம்பவங்கள் வீடியோக்களாக ஆன்லைனில் வலம் வருவதால், திருமணம் சார்ந்த வீடியோக்கள் நெட்டிசன்களின் விருப்பமாக இருக்கிறது.

மேடையில் நடனமாடும் புதுமணத் தம்பதியர் முதல் மணமகன் வேறொரு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ததற்காக தண்டிக்கப்படுவது வரை திருமணங்கள் தொடர்பான வீடியோக்களுக்கு முடிவே இல்லை. சில திருமணங்களில் நடக்கும் சில புதிய நிகழ்வுகளை நாம் காண்கிறோம். அவற்றில் சில தலைப்புச் செய்திளாக கூட வருகின்றன. மேலும் அவை இணையத்தில் மிகவும் பிரபலமாகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படியொரு வீடியோ தான் இப்போது இணைய வாசிகளிடையே அதிகம் பிரபலமடைந்துள்ளது. அதில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே மேடையில் அமர்ந்தபடி மணமகன் தூங்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிரஞ்சன் மகாபத்ரா பகிர்ந்த அந்த பெருங்களிப்புடைய வீடியோவில், புதுமணத்தம்பதி இருவரும் மேடையில் அமர்ந்திருந்தனர். அதில் மணமகள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்பாகவும் இருப்பது போல தெரிந்தது.

இருப்பினும், மணமகன் அப்படியே அதற்கு எதிர்மாறாக இருந்தார். ஒருவர் தனது திருமணத்தின்போது உற்சாகமாகவோ அல்லது சுறுசுறுப்பாகவோ இல்லாமல் இருப்பது கூட பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால், தனது திருமணத்தில் தூங்கிய நபரை எங்காவது பார்த்துள்ளோமா? இந்த நபரால் தனது திருமண வரவேற்பு விழா முழுவதும் விழிப்புடன் இருக்க முடியவில்லை. அந்த வீடியோ கிளிப்பில், மணமகன் தனது மனைவியின் தோளின் அருகே சாய்ந்தபடி தூங்கி விட்டார். அவரை விழிக்க வைக்கவும், நேராக உட்கார வைக்கவும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தங்களால் முடிந்தவரை பல முயற்சிகளை செய்து பார்த்துள்ளனர்.

Also read... விஷால் பட பாணியில் காரில் வந்த மணப்பெண்... அடுத்து நடந்த ட்விஸ்ட்?

ஆனால் அனைத்துமே வீணானது. இவ்வளவு ரகளை நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில் மணமகளோ அதனை சற்றும் பொருட்படுத்தாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். மணமகளின் ரியாக்ஷன் இல்லாத ரெஸ்பான்ஸும் நெட்டிசன்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு ரகளை நடக்கும் இந்த வீடியோவை ஷேர் செய்த நபர், பல்வேறு எமோஜிக்களுடன் எண்ணற்ற ஹேஷ்டேக்குகளையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த வீடியோ பதிவின் கருத்துப் பிரிவில் எண்ணற்ற கமெண்டுகளால் நிரம்பி வழிகிறது. மணமகன் தூங்கிவிட்டதாக வீடியோ கூறினாலும், பல யூசர்கள் அவர் தூங்கியதாக தெரியவில்லை எனவும் வீடியோ பார்ப்பதற்கு சந்தேகமாக இருக்கிறது எனவும் கூறியிருந்தனர். கிளிப்பில், அவர் நாற்காலியில் விழுந்து கிடப்பதை பார்த்தால், அவர் குடிபோதையில் இருக்கலாம் என்று சிலர் யூகித்திருக்கின்றனர். அதன் காரணமாகவே அவரால் நேராக உட்கார முடியவில்லை என்றும் பார்ப்பதற்கு போதை நிலையில் இருப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். இது தவிர, பெரும்பான்மையான நெட்டிசன்கள் வீடியோவை பார்த்து கேலி செய்தனர் மற்றும் வீடியோ சிரிப்பை வரவழைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி