ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஹாயாக பைக்கில் அந்தரத்தில் பறந்த புதுமண ஜோடி.. வைரல் வீடியோ!

ஹாயாக பைக்கில் அந்தரத்தில் பறந்த புதுமண ஜோடி.. வைரல் வீடியோ!

புதுமண ஜோடி

புதுமண ஜோடி

மணமக்கள் இருவரும் பைக்கில் அமர்ந்திருக்க, அவர்களது வாகனம் கெட்டியாக ரோப் மூலமாக கிரேன் ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சினிமாவில் எதிரிகளை டூ வீலரில் துரத்திச் செல்லும் ஹீரோ, திடீரென்று அந்தரத்தில் பறந்து சில வாகனங்களை கடந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். அதைப் பார்த்ததும் என்ன தோன்றும். என்ன இது, கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் இருக்கிறதே என்று நினைத்திருப்பீர்கள். இனி மனதை இன்னும் கொஞ்சம் தேற்றிக் கொள்ளுங்கள்.

  ஏனெனில் சினிமாவை மிஞ்சம் சாகசக காட்சிகளை இனி உங்களுக்கு அருகாமை பகுதிகளிலும் நீங்கள் பார்க்க நேரிடலாம். ப்ரீ வெட்டிங் சூட் எனப்படும், திருமணத்திற்கு முன்பு எடிக்கப்படும் படப்பிடிப்புகளில் தான் இத்தகைய சாகசங்கள் நடத்தப்படுகின்றன.

  வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நிகழ இருக்கும் திருமண நிகழ்வுகளை ஃபோட்டோவாக, வீடியோவாக படம்பிடித்து என்றும் மறவாத மலரும் நினைவுகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் இருக்கும். அன்றைய தினம் நாம்தான் ஹீரோ, ஹீரோயின் என்ற வகையில் மற்றவர்களில் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வோம்.

  குறிப்பாக, இந்த ப்ரீ வெட்டிங் ஃபோட்டோசூட் கலாச்சாரம் வந்துவிட்ட பிறகு, இப்போதெல்லாம் நிறைய ஜோடிகள் சினிமா பாடல்களுக்கு டூயட் ஆடி படம் பிடிக்கிறார்கள். கடற்கரைகள், மலைகள், ஆறுகள் என கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ள இயற்கையான சூழல்களில் அழகழகாக படம்பிடித்து மகிழ்கின்றனர்.

  சிலர் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாகச செயல்களையும் செய்கின்றனர். அத்தகைய நிகழ்வு தான் சமூக வலைதளங்களில் இப்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ட்விட்டர் ஒரு புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  அதில் மணமக்கள் இருவரும் பைக்கில் அமர்ந்திருக்க, அவர்களது வாகனம் கெட்டியாக ரோப் மூலமாக கிரேன் ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட பகுதியில் கார் ஒன்றும் நிற்கிறது. மணமகன் பைக் ஆக்ஸிலேட்டரை திருகும்போது, வாகனத்தோடு அந்த ஜோடியை அலேக்காக தூக்கிச் செல்கிறது கிரேன். எப்படியும் எடிட்டிங் வித்தைகளை வைத்து, இந்த ஜோடி தன்னியல்பாக பைக்கில் பறந்து செல்வதைப் போல கொண்டு வருவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

  சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. பலரும் தங்களுடைய திருமண நிகழ்விலும் இதேபோன்று படம்பிடிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருசிலர், இதெல்லாம் வேண்டாத வேலை என்று கண்டித்துள்ளனர்.

  சமூக பொறுப்புடன் எடுக்கப்படும் ஃபோட்டோசூட்

  உங்களுடைய திருமண ஃபோட்டோசூட் நிகழ்வும் டிரெண்ட் ஆக வேண்டும் என்றால் நீங்களும் இப்படி சாகசம் செய்தாக வேண்டும் என்றில்லை. கொஞ்சம் சமூக அக்கறை இருந்தால் கூட, நீங்களும் மக்கள் மனதில் இடம்பிடிக்கலாம்.

  அண்மையில், கேரளாவில் பெண் ஒருவர் திருமணம் செய்தார். அங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதையும், அவற்றில் மழைநீர் தேங்கி நிற்பதையும் அவர் தனது ஃபோட்டோசூட்டில் கவர் செய்தார்.

  Read More: Personality Test: உங்கள் கையெழுத்தை வைத்தே, நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்!

  புகைப்படக்காரரின் கை வண்ணத்தில் அந்தப் படம் அழகாகவும் இருந்தது. அதே சமயம், சமூகப் பிரச்சனையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதாகவும் அமைந்தது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Trending News