72 ஆண்டுகால திருமண வாழ்க்கை... 100 வயது தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

100 வயது தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்

தம்பதிகளுக்கு இடையே சண்டைகள் எழுவது இயல்பான ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வாழ்க்கையில் சரியான பார்ட்னரை கண்டுபிடிப்பது தற்போது சவாலான விஷயமாகிவிட்டது எனலாம். முகங்களை பார்க்காமல் திருமண செய்துகொண்ட காலங்கள் கடந்துபோய், திருமணத்திற்கு முன்பே குறிப்பிட்ட காலம் சேர்ந்து வாழ்ந்து, பிடித்தால் வாழ்க்கையை தொடரலாம் அல்லது விலகிக்கொள்ளலாம் என்ற நிலைக்கு திருமண கலாச்சாரம் முன்னேறிவிட்டது. இதில் இருக்கும் சாதக, பாதக விஷயகள் மீதான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மும்பையைச் சேர்ந்த வயதான மூத்த தம்பதிகள் தங்களின் 72 வது திருமண நாளை மகிழ்ச்சியாக அண்மையில் நிறைவு செய்துள்ளனர்.

ஹியூமன்ஸ் ஆஃப் பம்பாய் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறது. அந்த பக்கத்தில் அண்மையில் 101 வயது தாத்தாவும், 90 வயதை எட்டிய அவரது மனைவியும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழும் வாழ்க்கை ரகசியத்தை பகிர்ந்து கொள்ளும் வீடியோவை பதிவிட்டுள்ளது. அதில், வயது மூத்த தம்பதிகள் திருமண உறவில் இவ்வளவு நாட்கள் ஒன்றாக வாழ்ந்தது, அவர்களுக்கு இடையில் இருக்கும் பரஸ்பர அன்பை வெளிப்படையாக கூறியுள்ளனர். மேலும், தற்போதைய காலங்களில் திருமண பந்தத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகளை தடுத்து, நிம்மதியாக வாழ்வது எப்படி? என்பது குறித்து யோசனைகளையும் பகிர்ந்துள்ளனர்.
உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பரஸ்பர அன்பு பற்றி கூறுங்கள் என அவர்களிடம் கேட்டபோது, " இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கிறோம். மூன்றுவேளை உணவு சாப்பிடுவதில், ஏதாவது ஒருவேளை உணவை இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். அன்றைய நாளில் நடைபற்ற விஷயங்களை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். தம்பதிகளுக்கு இடையே சண்டைகள் எழுவது இயல்பான ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சண்டைகள் இல்லாத வாழ்க்கை இருக்காது என்பதால், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். தவறுகளை மன்னிக்க பழங்குகள் அல்லது அதனை கடந்துபோக பழகிக்கொண்டால், குடும்ப உறவில் பிரச்சனைகள் எழ வாய்ப்புகள் இல்லை. ஒன்றாக வாழ வேண்டும் என்பதில் இருந்து இருவரும் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் அவர்களுக்குள் இருக்கும் அன்பை புரிந்துகொள்ள முடியும். உங்களுக்கும் அப்படியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை பிறக்கும்.

Also read... தென்கொரியாவில் ரூ.3 கோடி மதிப்பிலான ஓவியம் சேதம் - 2 பேர் கைது

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது இந்த வீடியோ. மூத்த தம்பதிகளின் வாழ்க்கை தங்களை நெகிழ வைப்பதாக தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அன்பை அள்ளித்தெளிப்பதாகவும் கூறியுள்ளனர். தம்பதிகள் திருமண பந்தத்தில் இருந்து விலகும் முடிவு எடுத்தவர்கள் இந்த வீடியோவைப் பார்த்தால் தங்களின் அந்த எண்ணத்துக்கு முற்றிப்புள்ளி வைப்பார்கள் என பலரும் கூறியுள்ளனர். இந்தியாவில் விவகாரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. திருமண உறவு பாதியிலேயே முடிவதற்கு முக்கிய காரணம், தம்பதிகளுக்குள் விட்டுக்கொடுத்தல் பண்பு குறைந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். பரஸ்பர அன்பு காட்டுவதை விடுத்து கோபத்தை முன்னிறுத்துவது விவகாரத்துக்கான முதன்மை காரணம் எனவும் தெரிவிக்கும் நிபுணர்கள், இதுபோன்ற ஒரு சில வீடியோக்கள் திருமண பந்தத்தின் புனிதத்தை காட்டுவதாக நெகிழ்ந்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: