Home /News /trend /

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! உணவை தனக்கு தானே டெலிவெரி செய்துக்கொண்ட டெலிவரி பாய்

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! உணவை தனக்கு தானே டெலிவெரி செய்துக்கொண்ட டெலிவரி பாய்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Trending | அமெரிக்காவைச் சேர்ந்த டெலிவரி ஏஜென்ட் ஒருவர் டிக்டாக்கில் வெளியிட்ட நிதி ஹேக் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, Indiausususus
    சைமன் ஃப்ரேசர் என்ற உணவு டெலிவரி ஏஜென்ட், தனக்கான உணவை ஆர்டர் செய்து அதற்குரிய பணத்தைப் பெறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது. Doordash மூலம் இலவசமாக உணவை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இன்றைக்கு சமைக்கிறமோ? இல்லையோ? ஸ்மார்ட்போனை எடுத்து நொடியில் விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவைக்கிறோம். இதற்காகவே உணவை டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் அவ்வப்போது பல ஆஃபர்களை அள்ளி வழங்குகின்றனர். மேலும் சில நேரங்களில் டெலிவரி ஏஜெண்ட்டுகளுக்கும் பல சலுகைகள் வழங்கப்படும். ஆனாலும் டெலிவரி ஏஜென்ட்டுகளுக்கு கிடைக்கிறதா? என்பது சந்தேகம் தான்.

    இந்நிலையில் தான் அமெரிக்காவைச் சேர்ந்த டெலிவரி ஏஜென்ட் ஒருவர் டிக்டாக்கில் வெளியிட்ட நிதி ஹேக் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ பலருக்கும் ப்ரீ அட்வைஸ் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதால் லட்சக்கணக்கானப் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. அப்படி என்ன இருந்தது? வாங்க நாமும் தெரிஞ்சுக்கலாம்…

    Read More : விரும்பி சாப்பிட்ட 'பகோடா' வையே குழந்தைக்கு பெயராக வைத்த இங்கிலாந்து தம்பதி!


    அமெரிக்காவை சேர்ந்த சைமன் ஃப்ரேசர் என்பவர் door dash மூலம் உணவை டெலிவரி செய்யும் தொழிலாளி. வழக்கம் போல உணவை ஆர்டர் செய்யும் நபர்களுக்கு டெலிவரி செய்து வந்த அவர், பல இலவச ஆஃபர்கள் உள்ள நிலையில், ஒரு நாள் தனக்கான உணவை ஏன் நாமே ஆர்டர் செய்து டெலிவரி செய்துக் கொள்ளக்கூடாது என முடிவெடுத்துள்ளார். உடனே DoorDash செயலி மூலம் இலவச டெலிவரி சலுகையைப் பயன்படுத்தி தனது வீட்டிற்கு அருகில் உள்ள ரெஸ்டாரண்டில் ஆர்டர் செய்கிறார்.

    இதனைத் தொடர்ந்து சிமன் தன்னுடைய DoorDash டெலிவரி கணக்கில் உள்நுழைந்து தனது ஆர்டரைத் தானே டெலிவரி செய்து உணவைப் பெறுவதற்காகக் கீழே செல்கிறார்.இப்போது தனக்கான உணவை இலவசமாக பெற்றதோடு, தானே செய்துக் கொண்டதால் அதற்கான டெலிவரி பணத்தையும் பெற்றுவிட்டேன் என்று தனது டிக் டாக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளதோடு, பல எதிர்மறையான கருத்துக்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். “நல்ல நிதி தந்திரம் என்றாலும் நீங்கள் நேரடியாக கடைக்கு சென்று வாங்கியிருந்தால் மலிவான விலையில் நீங்கள் வாங்கியிருக்கலாம் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். என்ன இருந்தாலும் உங்களுக்குத் தேவையில்லாத வேலை. என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    இதோடு நிதி மேலாண்மையில் உங்களது ஆர்வம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது என்றும் எப்படி உங்களால் மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது என்பது போன்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சைமன் ஃப்ரேசர் டெலிவரி ஏஜென்ட் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

    பொதுவாக DoorDash என்பது Zwiggy மற்றும் Zomato போன்ற பிரபலமான US டெலிவரி சேவைகளை வழங்குகிறது. அவ்வப்போது மக்களுக்குத் தேவையாக சலுகைகளை அதிரடியாக வழங்கிவரும். ஆனால் இந்த அனைத்து சலுகைகளும் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்குக் கிடைக்குமா? என்ற கேள்விக்கு சைமன் ஃப்ரேசர் டெலிவரி ஏஜென்ட் டிக் டாக் வீடியோ பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, US, Viral

    அடுத்த செய்தி