Home /News /trend /

10 அடி நீளமுள்ள தோசையை சாப்பிட்டால் ரூ.71,000 பரிசாக வழங்கும் உணவகம்! எங்கே இருக்கிறது தெரியுமா?

10 அடி நீளமுள்ள தோசையை சாப்பிட்டால் ரூ.71,000 பரிசாக வழங்கும் உணவகம்! எங்கே இருக்கிறது தெரியுமா?

Dosa Eating challenge

Dosa Eating challenge

Dosa Eating Challenge | 10 அடி நீளமுள்ள தோசையை சாப்பிடும் நபருக்கு ரூ.71,000 பரிசாக வழங்கப்படும் என்று அறிவிப்பு தந்துள்ளது. பலருக்கும் இது எளிதான போட்டி போன்று தோன்றலாம்.

உணவு என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் உணவு மிக முக்கியமானதாகும். குறிப்பாக மனிதர்களுக்கு உணவு வகைகள் பலவாறு கிடைக்கிறது. சைவ உணவுகளில் பல ஆயிரம் வகைகள், அசைவ உணவுகளில் பல ஆயிரம் வகைகள் என எண்ணற்ற வகை உணவுகள் மனிதர்களுக்கு உள்ளது. தற்போது உணவுகளை வைத்து டிஜிட்டல் முறையிலும் பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டனர்.

அந்த அளவிற்கு உணவுக்கு எல்லா மக்களிடமும் முக்கியவத்துவம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு பல உணவகங்களும் உணவு சார்ந்த போட்டிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தில் வரும் காட்சிகளை போன்று, இவ்வளவு உணவுகள் சாப்பிட்டால் இவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்பது போல டெல்லியை சேர்ந்த ஒரு உணவகமும் இது போன்ற உணவு போட்டியை அறிவித்துள்ளது.

அதன்படி, 10 அடி நீளமுள்ள தோசையை சாப்பிடும் நபருக்கு ரூ.71,000 பரிசாக வழங்கப்படும் என்று அறிவிப்பு தந்துள்ளது. பலருக்கும் இது எளிதான போட்டி போன்று தோன்றலாம். ஆனால், உண்மையில் இது சிரமமான போட்டியாகும். அதுவும் 10 அடி நீளமுள்ள தோசையை அவ்வளவு எளிதில் தனி நபரால் சாப்பிட முடியாது என்பதே உண்மை.



 




View this post on Instagram





 

A post shared by Bhawna 💫 (@delhi_tummy)






எனினும் பலர் இந்த போட்டியில் கலந்து கொண்டு வருகின்றனர். இது குறித்து பல இன்ஸ்டாகிராம் பிளாகர்களும் தங்களது பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் இந்த வீடியோக்களை பார்த்து வருகின்றனர். இதில் சிலர் அந்த தோசையின் விலை என்ன என்பதை குறித்து கேட்டு வருகின்றனர். அதற்கு அந்த பிளாகர் அதன் விலை ரூ.1500 என்று பதிலளித்துள்ளார். ஒருவேளை இந்த போட்டியில் கலந்து கொண்டு தோற்று விட்டோம் என்றால், இந்த பணத்தை நாம் கட்டிவிட வேண்டும். ஆனால், நீங்கள் இந்த தோசை போட்டியில் வெற்றி பெற்று விட்டால் இதற்கான பரிசு தொகையான ரூ.71,000 ரொக்க பணத்தை வென்று விடலாம்.

Also Read : வினோதமான உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ள புதிய உணவு - மேகி பரோட்டா!

இந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு பலர் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் இவ்வளவு பெரிய தோசையை சாப்பிடுவது கடினம் தான் என்று கூறி வருகின்றனர். மேலும் சிலர், இந்த பணத்திற்க்காகவே தோசையை சாப்பிட்டு விடலாம் என்று கருத்து கூறி வருகின்றனர். சிலர் இந்த வீடியோ எடுத்தவரையே அந்த தோசை போட்டியில் கலந்து கொள்ளுமாறு வேடிக்கையான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

Also Read : ஆஹா!! கேரளாவை கலக்கும் புட்டு ஐஸ்க்ரீம்

சாப்பாடு போட்டி என்பது சிறப்பான உணர்வை கொண்டு தர கூடியவை. இது போன்ற போட்டிகள் பல நடந்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, உத்தர பிரதேசத்தில் இது போன்ற உணவு போட்டி ஒன்று நடந்தது. அதில் 60 பூரிகளை ஒரே நேரத்தில் சாப்பிட கூடிய போட்டி நடந்தது. இதில் பல பூரி விரும்பிகள் ஜாலியாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Dosa, Trending, Viral Video

அடுத்த செய்தி