தசரா பண்டிகை அன்று ஸ்மோடோவில் பிரியமான உணவை ஆடர் செய்து ஒருவர் ஒரு மணி நேரமாகக் காத்துக்கொண்டு இருந்த நிலையில் உணவுடன் வந்த டெலிவரி பாய்க்கு வாசலில் ஆரத்தி எடுத்து பாட்டுப் பாடி வரவேற்ற நிகழ்வு டெல்லியில் நடந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் சஞ்சீவ் குமார் என்ற நபர் தசரா பண்டிகை அன்று தனக்குப் பிரியமான உணவை ஸ்மோடோ ஆன்லைன் டெலிவரி ஆப்பில் ஆடர் செய்து காத்துக் கொண்டுள்ளார். தசரா பண்டிகை நாளாகப் பல பேர் ஆன்லைனில் உணவுகளை டெலிவரி ஆடர் செய்த நிலையில் உணவு வரக் கால தாமதம் ஆகியுள்ளது.
சாதாரண தினங்களிலேயே போக்குவரத்து நெரிசல், உணவு தாயார் செய்ய நேரம் ஆவது போன்ற பல காரணங்களால் உணவு டெலிவரி தாமதம் ஆவது உண்டு என்ற நிலையில் பண்டிகை காலங்களில் டெலிவரி செய்வது கடினமாகவே உள்ளது.
View this post on Instagram
இப்படி இருக்கும் சூழலில் டெல்லியில் வசிக்கும் சஞ்சீவ் குமார், அவரது பிரியமான உணவை டெலிவரி செய்ய வந்த டெலிவரி பாய்க்கு ஆரத்தி எடுத்து பாட்டுப் பாடி வரவேற்றுள்ளார்.
இதற்கு அந்த டெலிவரி பாயும் ஹெல்மட்டை கழற்றி திலகத்தைப் பெற்றுள்ளார். இந்த காட்சியை மொபைல் போனில் வீடியோவாக பதிவுசெய்த அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் டெலிவரி பாயும் சிரித்துக்கொண்டே வியந்த காட்சி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த சிறப்பான சம்பவத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Viral Video, Zomato