போலி ரெமிடிசிவிர் மருந்து - டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

போலி ரெமிடிசிவிர் மருந்து

டெல்லி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ரெமிடிசிவிர் மருந்து முதன்மை மருந்தாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டதால், சந்தையில் இந்த மருத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
போலி ரெமிடிசிவிர் மருந்து சந்தையில் உலாவுவதாக எச்சரித்துள்ள டெல்லி காவல்துறை, அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸூக்கு தடுப்பு மருந்தாக ரெமிடிசிவிர் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து கொரோனாவைக் குணப்படுத்தாது என்றாலும், ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளை மீட்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. டெல்லி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ரெமிடிசிவிர் மருந்து முதன்மை மருந்தாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டதால், சந்தையில் இந்த மருத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பல இடங்களில் ரெமிடிசிவிர் மருந்தை தேடி மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த மருந்துக்கான தேவை அதிகரித்த நிலையில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் ரெமிடிசிவிர் மருந்தை பதுக்கத் தொடங்கின. பல இடங்களில் ஒரு டோஸ் ரெமிடிசிவிர் பல ஆயிரங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது. உயிரைக் காப்பாற்ற வேண்டும் என இக்கட்டான சூழலில் இருப்பவர்கள், பணத்தைப்பொருட்படுத்தாமல் அந்த மருந்துகளை வாங்கத் தொடங்கினர்.

கள்ளச்சந்தையிலும் ரெமிடிசிவிர் மருந்து விற்பனை கொடி கட்டிப்பறந்தது. மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் சுமார் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த டெல்லி அரசு, அதிக விலைக்கு ரெமிடிசிவிர் மருந்தை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.மருந்துக்கான தேவையை உணர்ந்து கொண்ட சில சமூகவிரோதிகள், போலியாக ரெமிடிசிவிர் மருந்தை தயாரிப்பதிலும் ஈடுபட்டனர். அச்சு அசலாக ரெமிடிசிவிர் மருந்துபோல தயாரித்து போலியாகவும், கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டெல்லி காவல்துறை மே 1ம் தேதி அந்த கும்பலைக் கைது செய்தது. மனீஷ் கோயல் தலைமையிலான அந்தக் குழு உத்தரக்காண்ட் மாநிலம் கோத்வாரில் மருந்து உற்பத்தியை செய்து வந்தது.

Also read... ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு!

அந்த இடத்திலும் ஆய்வு நடத்திய காவல்துறையினர் ஒட்டுமொத்த போலி ரெமிடிசிவிர் மருந்துகளையும், அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். போலி ரெமிடிசிவிர் மருந்து இன்னும் கள்ளச் சந்தையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த மருந்தின் புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.

காவல்துறை அதிகாரி மோனிகா பரத்வாஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் போலி ரெமிடிசிவிர் மருந்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். COVIPRI’ என்ற பெயரில் இருக்கும் போலி ரெமிடிசிவிர் மருந்தை வாங்க வேண்டாம் என்றும், அது போலி எனவும் கூறியுள்ளார். மேலும், இந்த மருந்தை உற்பத்தி செய்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்த கும்பலை கைது செய்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர், சந்தையில் புழக்கத்தில் இருக்கும் இந்த மருந்துகளை உபயோகப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: