டெல்லியை சேர்ந்த தொழிலதிபரான நிகில் நந்தா என்பவர் ஜென்சி நந்தா அறக்கட்டளை சார்பாக இந்தியாவில் உள்ள நான்கு திசைகளிலும் ஹனுமன் சிலையை நிறுவ முடிவு செய்துள்ளார். ஏற்கனவே வடக்கே சிம்லா, கிழக்கில் குஜராத் ஆகிய இடங்களில் தனது அறக்கட்டளை மூலமாக அனுமன் சிலைகளை நிறுவிய அவர், தெற்கே ராமாயணத்துடன் முக்கிய பங்குவகித்ததாக கருத்தப்படும் ராமேஸ்வரத்தில் அனுமனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த ஒலைகுடாப் பகுதியில் ரூ.100 கோடி செலவில், 108 அடி உயரத்தில் கட்டப்படும் அனுமன் சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த திட்டத்திற்கு ‘ஹனுமான்ஜி சார் தாம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சிலை, ஜக்கு மலைக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய சிலை என்ற பெயரைப் பெற்றுள்ளது. 2010ம் ஆண்டு வடக்கில் சிம்லாவிலுள்ள ஜக்கு மலையிலும், மேற்கில் குஜராத்தில் மோர்பி பகுதியிலும் ஹரிஷ் சந்தர் நந்தா கல்வி மற்றும் அறக்கட்டளையால் இரண்டு பிரம்மாண்ட அனுமான் சிலைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது பிப்ரவரி 23 அன்று, ஹரிஷ் சந்தர் நந்தா அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தொழிலதிபரான நிகில் நந்தா தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த அடிக்கல் நாட்டு விழா, RSS அகில இந்திய பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே மற்றும் முன்னாள் UPSC செயலாளர் சௌபே ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து தொழிலதிபர் நிகில் கூறியதாவது "எனது நிறுவனம் நாட்டிலேயே பல் துலக்கும் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. JHS Svendgaard Laboratories இந்தியாவின் முன்னணி பல் துலக்கும் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். அனுமனின் பக்தனாக, சிலைகளை நிறுவுவதன் மூலம் அவரது ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். "ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் சிம்லாவில் உள்ள ஜக்கு மந்திரில் ஹனுமான் சிலையை உருவாக்க முடிந்தது ஒரு ஆசீர்வாதம்" என தெரிவித்துள்ளார்.
Also read... பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப்ஸ் எடுத்து விபரீத சாதனை முயற்சி செய்த இளைஞர்!
சிம்லாவில் கட்டப்பட்ட முதல் மாபெரும் சிலை இரண்டே ஆண்டுகளில் ராஜஸ்தான் சிற்பி செதுக்கி முடிக்கப்பட்டுள்ளது. . சிலை அமைக்க சுமார் 1,500 டன் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அந்த உயரத்தில் உள்ள அபரிமிதமான காற்றின் வேகத்தை மனதில் கொண்டு, ஐஐடி டெல்லியைச் சேர்ந்த குழு, சிலை அமைப்பதற்கான கான்கிரீட்டை சிறப்பாக வடிவமைத்துள்ளது. அதேபோல், தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் மூன்றாவது பிரம்மாண்டமான அனுமன் சிலை அமைக்கப்பட உள்ளது. 2022-ல் சிலைக்கான பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் முழுமை பெற்று 2024-ம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.