சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஐஸ்கிரீம் தோசை குறித்து வீடியோ வைரல் ஆகி வந்தது. தோசை என்றாலே அதற்கு அடுத்தபடியாக இட்லியிலும் அதே ரெசிபி செய்து விடுவார்கள் என்று இன்டர்நெட் உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அதுவும் இப்போது நடந்தேறி விட்டது.
வழக்கமான இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டோ போன்ற வெரைட்டிகளை சாப்பிட்டு நமக்கு போர் அடிக்கும். அத்தகைய சமயங்களில் ஹோட்டல்களில் சென்று ஏதேனும் புதுமையான உணவு இருக்கிறதா என கேட்டு வாங்கி சாப்பிடுவது நமது வழக்கமாக இருக்கிறது.
நமது ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற உணவு வகைகள் ஒவ்வொரு நாளும் அறிமுகமாகி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கறி தோசை மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதேபோல, வேறு சில ஊர்களில் இப்போது கறி இட்லி என்ற உணவும் பிரபலமாகி வருகிறது.
முகம் சுளிக்கும் ரெசிஃபிக்கள்
யூ டியூபில் ஃபுட் ரிவியூவ் செய்பவர்கள், வி-லாக் செய்பவர்கள் போன்றவர்களின் வருகைக்குப் பிறகு புதுமையான உணவுகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அது எல்லோரது கவனத்திற்கும் கொண்டு வரப்படுகிறது. சில புதுமையான உணவுகள் செம்ம வைரலாகி மக்களின் ஆசையை தூண்டுகின்றன.
அதே சமயம், வெறும் வைரல் வீடியோவிற்காக அல்லது எதையேனும் புதுமையாக செய்கிறோம் என்ற பெயரில் அவ்வபோது முகம் சுளிக்க வைக்கும் உணவு வகைகளும் வெளி வருகின்றன. அண்மையில் நூடுல்ஸ் புரோட்டா, ஐஸ்கிரீம் தோசை போன்ற உணவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றன.
தற்போது லேட்டஸ்ட் டிரெண்டாக ஐஸ்கிரீம் இட்லி வெளிவந்திருக்கிறது.
also read : தலையற்ற முண்டமாக வலம் வந்த நபர்.. கூகுள் மேப்பில் இருந்த படத்தால் பரபரப்பு
டெல்லியில் கிடைக்கிறது…
டெல்லி மாநகரின் லஜ்பத் நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த ஐஸ்கிரீம் இட்லி கிடைக்கிறது. உடனே ஆவியில் வேக வைக்கும் இட்லியில், கூலிங் ஐஸ்கிரீம் எப்படி கிடைக்கும் எனக் கேட்கத் தோன்றுகிறதா? அதுதான் இல்லை. இட்லி எப்போதும் போல வேக வைத்து, அதற்கு கார சட்னி, தேங்காய் சட்னி போன்றவற்றை சேர்த்த பிறகு, அதன் மீது ஐஸ்கிரீம் வைக்கின்றனர்.
பிறகு எல்லாவற்றையும் ஒரே கலவையாக கலந்து, மீண்டும் இட்லி, சட்னி வைத்து சாப்பிடக் கொடுக்கின்றனர்.
View this post on Instagram
also read : பெண் பயிற்சியாளரை பலமுறை தாக்கிய டால்பின்.. கேமராவில் சிக்கிய 'திக் திக்' நிமிடங்கள்!
ஐஸ்கிரீம் என்றால் நம்மில் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? ஆனால், இந்த இட்லி ஐஸ்கிரீம் காம்போ எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது அல்லவா? விஷயத்திற்கு வருவோம். இட்லி சூடான உணவு. அதனுடன் கார, சாரமான சட்னி அல்லது சாம்பார் சேர்த்து சாப்பிடும்போது, அதன் ருசியே தனி தான்.
அதே சமயம், ஐஸ்கிரீம் நல்ல இனிப்பு சுவையும், மிகுதியான கூலிங் தன்மையும் கொண்டது. இப்போது, சூடான இட்லி, கூலிங் ஐஸ்கிரீம், கார சாரமான சட்னி, ஐஸ்கிரீமின் இனிப்பு இவையெல்லாம் கலந்த கலவை எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எந்தவொரு சுவையும் அதன் இயற்கை தன்மையோடு இந்த உணவில் இருக்காது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ice cream, Viral Video