கோவிட்டால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உயிர் காக்க சரியான நேரத்தில் உதவிய டாக்ஸி டிரைவர் - பாராட்டும் நெட்டிசன்கள்!

மூதாட்டியின் உயிர் காக்க சரியான நேரத்தில் உதவிய டாக்ஸி டிரைவர்

கோவிட் தொற்று பாதிப்பு உறுதியான தனது தாய்க்கு அவசர சிகிச்சை அளிக்க மருத்துவமனையை தேடி அலைந்த முயற்சியில் ஒரு கால் டாக்ஸி டிரைவர் மிகவும் உறுதுணையாக இருந்ததாக உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனாவின் இறுகிய பிடியில் சிக்கி நாடு தத்தளித்து வரும் இக்கட்டான நேரத்தில், தொற்று எங்கே யாருக்கு யார் மூலமாக பரவுகிறது என்பது தெரியாத நிலையில், சில நேரங்களில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ளும் உதவிகள் நம்மை நெகிழ செய்கின்றன. இந்த பேரிடர் காலத்தில் தக்க சமயத்தில் தனக்கு கிடைத்த உதவி பற்றி மிகவும் நன்றி மற்றும் நெகிழ்ச்சியுடன் , பத்திரிகையாளர் ரிதுபர்னா சட்டர்ஜீ என்பவர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரிதுபர்னா சட்டர்ஜீ (Rituparna Chatterjee) , கோவிட் தொற்று பாதிப்பு உறுதியான தனது தாய்க்கு அவசர சிகிச்சை அளிக்க மருத்துவமனையை தேடி அலைந்த முயற்சியில் ஒரு கால் டாக்ஸி டிரைவர் மிகவும் உறுதுணையாக இருந்ததாக உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். தொற்று பாதிக்கப்பட்ட தனது தாயை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டவர் உபேர் நிறுவன டாக்ஸி டிரைவர் என்றும் ரிதுபர்னா சட்டர்ஜீ குறிப்பிட்டுள்ளார்.மேலும் குறிப்பிட்ட டாக்ஸி டிரைவருடன் வாட்ஸ்அப்பில் தான் செய்த chat-ன் ஸ்கிரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அந்த chat-ல் டிரைவர் ரிதுபர்னாவுடைய தாயின் உடல்நிலையைப் பரிசோதித்து, விரைவில் அவருக்கு உடல் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையை அளிக்கிறார். ரிதுபர்னாஅந்த ட்விட்டர் பதிவில் சாட்டர்ஜி உபேர் டிரைவருடனான தனது அனுபவத்தை விரிவாக கூறியுள்ளார். அவரது தாய் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு 12-வது நாளில் இருந்துள்ளார். அவரது ஆக்சிஜன் அளவு 80-ஆகி இருந்துள்ளது.

இதனை அடுத்து அவசர சிகிச்சைக்காக டெல்லி புறநகரில் உள்ள ஒரு கோவிட் சிகிச்சை மையத்திற்கு தனது தாயை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்ய முயன்றுள்ளார் ரிதுபர்னா. ஆனால் அவரால் ஒரு ஆம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்ய முடியாமல் போக, தனது தாயை கூட்டி செல்ல ஒரு cab-ஐ ஏற்பாடு செய்ய அடுத்தகட்ட முயற்சிக்கு சென்றுள்ளார்.

இருப்பினும் சுமார் 4 cab டிரைவர்கள் சவாரியை கேன்சல் செய்துள்ளனர். 5-வது முறையாக ஒரு cab-ஐ புக் செய்த போது, உடனடியாக டிரைவரை அழைத்து தனது தாயின் இக்கட்டான நிலை குறித்து எடுத்து கூறி உள்ளார். டிரைவர் கோவிட் பாதித்த அவரது தாயை அழைத்து செல்ல சம்மதித்து வந்ததோடு மட்டுமல்லாமல், ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து அவர்களுக்கு உதவினார். பின் இருவரையும் ஒரு கோவிட் சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்று, அங்கு நடைமுறைகளை முடிக்கும் வரை வேறு ஏதாவது உதவி தேவைப்பட போகிறது என்றெண்ணி அந்த டிரைவர் அங்கேயே காத்திருந்துள்ளார்.அடுத்த நாள் மீண்டும் ரிதுபர்னா தனது தாயை கோவிட் மையத்திலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற வேண்டியிருந்த போது, அதே உபேர் டிரைவர் உதவ வந்தார். அவரது தாயார் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், ரிதுபர்னாவை அவரது வீட்டில் இறக்கி விட்டுள்ளார். பின் ரிதுபர்னா கொடுத்த பணத்தை வணக்க மறுத்த அந்த டிரைவர், தான் செய்து வரும் மனிதாபிமானப் பணிகளுக்காக “அதிக சம்பளம்” பெறுவதாக கூறியுள்ளார்.

Also read... கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ளும் 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு காத்திருக்கும் 1 மில்லியன் டாலர் பரிசு!

மேலும் கடந்த ஆண்டு கோவிட் தொற்றால் தான் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாகவும் அந்த டிரைவர், ரிதுபர்னாவிடம் கூறியுள்ளார். நடந்த நிகழ்வுகளை பதிவாக போஸ்ட் செய்துள்ள ரிதுபர்னாவின் ட்விட்டிற்கு பலரும் அந்த டிரைவரை பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். புத்திசாலித்தனமான மற்றும் மனிதாபிமான அந்த நபருக்கு பொருத்தமான வெகுமதி அளிக்க வேண்டும். அவர் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு உண்மையான மனிதர் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: