முன்பெல்லாம் கடைக்கு நேரடியாக சென்று ஒரு பொருளை வாங்கும்போது, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்கள் நமக்கு விளக்கம் அளிப்பார்கள். இப்போது, பெரும்பாலும் பொருள்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கி வருகிறோம். அப்படி வாங்கும் பொருள்களை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியாமல் திணறுவது வாடிக்கையானதே.
நம் சந்தேகங்களுக்கு தீர்வு அளிப்பதற்காகத்தான் ’செயல்முறை கையேடு’ என்றை தொடர்புடைய தயாரிப்பு நிறுவனங்கள் அனுப்பி வைக்கின்றனர். பெரும்பாலும் இதை நம்மில் பலர் கண்டு கொள்வதில்லை. அதே சமயம், இன்றைக்கு எந்தவொரு பொருளும் எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான ரிவ்யூ வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.
ஒரு சில சமயம், பொருளை பயன்படுத்த தெரியாமல் உடைத்து விடுவது அல்லது அதை வீட்டில் ஒரு ஓரமாக வைத்து விடுவது என்ற நிகழ்வுகள் அரிதாக நடக்கும். அப்படியொரு அனுபவத்தை தான், ரெட்டிட் இணையதளத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒயிட் போர்டு வாங்கிய வாடிக்கையாளர் :
ரெட்டிட் பயனாளர், புதிய வீட்டில் குடியேறியபோது ஆன்லைன் மூலமாக ஒயிட் போர்டு ஒன்றை ஆர்டர் செய்தார். வீட்டையே அலுவலகம் போல வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஆனால், போர்டு வந்த பிறகு, அவருக்கு அது ஏமாற்றத்தை கொடுத்தது.
Read More : ஆபீஸ் பார்ட்டிக்கு அழைப்பு விடுக்காததால் ரூ.72 லட்சம் நஷ்ட ஈடு வழங்கிய நிறுவனம்!
கிராக் இருப்பதாக தவறான கற்பனை :
ஒயிட் போர்டை வாடிக்கையாளர் பிரித்து பார்த்த போது, அதில் லேசான கிராக் இருப்பதாக அவருக்கு தோன்றியது. இருப்பினும், அது வெளியே தெரியும் அளவுக்கு பெரியதாக இல்லை என்பதால் போர்டை அவர் திருப்பி அனுப்பவில்லை.
சில நாட்கள் கழித்து, ஒயிட் போர்டில் எழுத முயற்சி செய்த போது, அதில் எழுத்துக்களை இலகுவாக எழுத முடியவில்லை. ஃபோர்டை துடைக்கவும் முடியவில்லை.
ஒன்றரை ஆண்டுகளாக தூக்கிப் போடப்பட்ட போர்டு :
எழுதுவதற்கு உகந்த நிலையில் இல்லை என்று நினைத்த வாடிக்கையாளர் வீட்டில் ஒரு ஓரமாக அதை வைத்து விட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக போர்டை பயன்படுத்தவில்லை. அதாவது, போர்டை பயன்படுத்த தொடங்கிய 24 மணி நேரத்தில், அது சரி வராது என ஒதுக்கி வைத்துவிட்டார்.
உண்மை தெரிந்து அதிர்ச்சி :
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, வாடிக்கையாளர் ஒயிட் போர்டை மீண்டும் உற்று நோக்கிய போது, அதில் இருப்பது கிராக் அல்ல என்றும், போர்டின் பாதுகாப்புக்காக பிளாஸ்டிக் கோட்டிங் செய்யப்பட்டு, அதை பிரிப்பதற்கான இடைவெளிதான் அது என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஃபோர்டை அவர் பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
வைரலாகும் பதிவு :
உங்கள் கையில் இருப்பது தங்கம் என்றோ, வைரம் என்றோ உணராத வகையில், அது நீங்கள் பயன்படுத்த முடியாத வீண் பொருள் தான். அதை போலத்தான் இவரது கதையும் இருக்கிறது. ரெட்டிட் தளத்தில் இவரது பதிவு வைரல் ஆகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online shopping, Trending, Viral