விஜய் பட பாடலுக்கு தீபக் சாஹர் சகோதரி அசத்தல் நடனம்... கவனம் ஈர்க்கும் வீடியோ

விஜய் பட பாடலுக்கு தீபக் சாஹர் சகோதரி அசத்தல் நடனம்

தீபக் சாஹரின் சகோதரி மால்தி சாஹர் விஜய் பட பாடலுக்கு நடனம் வீடியோ ஒன்று தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 • Share this:
  இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தீபக் சாகர் ஹீரோவாக எழுச்சி பெற்றார். பவுலிங்கில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கில் 82 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அருமையாக வெற்றிகரமாக பினிஷ் செய்தார்.

  ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்தியாவுக்காக ஆல்ரவுண்டராக ஆட வேண்டும் என்று அவர் முன்பு வெளிப்படுத்திய ஆசையும் நிறைவேறியது. சூரியகுமார் யாதவ் 44 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ரன் ரேட்டை தக்கவைத்ததே பிற்பாடு புவனேஷ்வர் குமார், தீபக் சாகர் ஹீரோயிஸத்துக்கு வித்திட்டது.

  தீபக் சாகரின் சகோதரி மால்தி சாஹர், வின்னிங் ஷாட் அடிக்கும் தீபக் சாகரின் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்ததோடு ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்தையும் வென்று விட்டாய் சகோதரா, நீ ஒரு நட்சத்திரம் தொடர்ந்து பிரகாசி என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

  Also Read : நான் ஒரு பிராமின் என்று கூறிய சுரேஷ் ரெய்னா- சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம்

  இந்நிலையில் தீபக் சாஹரின் சகோதரி மால்தி சாஹர் விஜய் பட பாடலுக்கு நடனம் வீடியோ ஒன்று தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ 2018-ம் ஆண்டு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பழைய வீடியோ தான் என்றாலும் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை முதன்மை போஸ்டாக வைத்துள்ளார்.  விஜய் நடித்த கில்லி படத்தின் பிரபல பாடலான அப்படி போடு என்ற பாடலுக்கு தான் அவர் டான்ஸ் ஆடி உள்ளார். தீபக் சாஹர் ஹீரோவாக தற்போது உருவெடுத்துள்ளதால் மால்தி சாஹரின் பழைய வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  Also Read : மைதானத்தில் காதலைத் தெரிவித்து காதலியை ஆரத்தழுவிய நபர்

  இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. ஆயிரகணக்கானோர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர். தீபக் சாஹர் சகோதரி இளைஞர் ஒருவர் உடன் அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: