ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உடல் உறுப்பு தானம் செய்ததன் மூலம் மூன்று பேரின் உயிரை காப்பாற்றிய முதியவர்!

உடல் உறுப்பு தானம் செய்ததன் மூலம் மூன்று பேரின் உயிரை காப்பாற்றிய முதியவர்!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 3 பேர் மட்டுமே உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனர் .

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவை ஒப்பிடும் போது, பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் உடல் உறுப்பு தானம் செய்யும் நன்கொடையாளர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.

சமீபத்தில் மூளைச்சாவு அடைந்த 52 வயதான ஒருவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை தானம் செய்ததன் மூலம் மூன்று பேருக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்துள்ளார். 52 வயதான நபர் வலது பக்க பலவீனத்தின் குறைபாட்டால், மந்தமான பேச்சால் அவதிப்பட்டார். எம்ஆர்ஐ பரிசோதனையில், உள்-மூளை இரத்தப்போக்கு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. நோயாளிக்கு வென்டிலேட்டர் கொடுக்கப்பட்டும் பயனளிக்கவில்லை.

பிறகு நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது குடும்பமும் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் மூன்று பேருக்கு பொறுத்தப்பது. சிறுநீரகங்களில் ஒன்று எஃப்எம்ஆர்ஐ-யில் 60 வயது பெண்ணுக்கு உறுப்பு மாற்றம் செய்யப்பட்டது. இரண்டாவது சிறுநீரகம் டெல்லியில் 51 வயது பெண் மற்றும் கல்லீரல் தில்லியில் உள்ள 54 வயது ஆணுக்கும் ஒதுக்கப்பட்டது.

"உடல் உறுப்பு தானத்தின் மதிப்பை உணர்ந்து, பல நோயுற்ற நோயாளிகளுக்கு உயிர் கொடுத்ததற்காக, இறந்த நன்கொடையாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நான் நன்றி கூறுகிறேன் என சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் அனில் மந்தானி தெரிவித்துள்ளார். உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மரணத்திற்குப் பின் உயிரைக் கொடுக்கும். இந்த உன்னதச் செயலில் நாம் அனைவரும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். சிறுநீரகங்களைப் பெற்ற நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

அவர்கள் நீண்ட காலமாக டயாலிசிஸ் மூலம் உயிருக்கு போராடினார்கள். அவர்களுக்கு இந்த உடல் உறுப்பு தானம் புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளது. எனவே அனைவரும் முன் வந்து உறுப்பு தானத்திற்கு பதிவு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Also read... பிளாஸ்டிக் பாட்டிலில் தலையைவிட்டு சிக்கிக்கொண்ட நாய்.. வைரல் வீடியோ

இந்தியாவில் உடல் உறுப்புகளின் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 3 பேர் மட்டுமே உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனர் என்கிறது ஆய்வு. உடல் உறுப்புகள் சரியான நேரத்தில் கிடைக்காமல் பல்வேறு மக்கள் இறந்து போகின்றனர். நாட்டில் உடல் உறுப்புகளை தானமாக பெற கிட்டதட்ட 5 லட்சம் பேர்கள் காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மாநில அரசு தெரிவிக்கிறது. தானம் செய்யப்பட்ட உறுப்புகளின் எண்ணிக்கை மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையின் இடைவெளியும் எப்போதும் அதிகரித்தே காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், அரை மில்லியன் இந்தியர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள்.ஏனென்றால் அவர்களுக்கு பொருத்தமான நன்கொடையாளரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நாம் அனைவரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

First published:

Tags: Organ donation