பெங்களூரில் பிராமணர்களின் பெயரில் உணவகங்கள், ஆன்லைன் செயலி மூலம் ஆர்டர் செய்யப் பார்த்ததில் அதிர்ச்சியடைந்து ட்விட்டரில் தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார் பெங்களூரைச் சேர்த்த நபர்.
பெங்களூருவில் பிராமண உணவகம் ('Brahmin' Eateries), பிராமின்ஸ் தட்டே இட்லி, பிராமின்ஸ் எக்ஸ்பிரஸ், அம்மா பிராமின்ஸ் கபே என்ற பெயர்களோடு உணவகங்கள் செயல்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்செயல் இந்தியாவில் சாதிவெறி அதிகரிப்பதைக் காட்டுகிறதா? என நெட்டிசன்கள் டிவிட்டரில் விவாதம்.
சமீப காலங்களாகவே வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக விதவிதமான பெயர்களோடு உணவகங்கள் மற்றும் பிற கடைகள் துவங்குவது வழக்கமாகிவிட்டது. இதுபோன்று தான் பெங்களூருவில், பிராமண உணவகம், பிராமண தட்டே இட்லி, பிராமின்ஸ் எக்ஸ்பிரஸ், அம்மா பிராமின்ஸ் கபே, பிராமன்ஸ் டிப்பன் சென்டர் எனப் பெயர்களோடு உணவகங்கள் செயல்படுகிறது. என்னதான் உணவகங்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டாலும், Zomato மற்றும் Swiggyல் ஆர்டர் செய்து சாப்பிடுவது ஒரு டிரெண்டாகிவிட்டது.
அப்படித்தான் உணவு விநியோக தளத்தில் உணவுகளை ஆர்டர் செய்ய முற்பட்ட ஒருவர், அங்குள்ள பெயர்களைப் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். பிராமண உணவகங்கள், பிராமண ரெஸ்டாரன்ட் என்பதைப் பார்த்ததும் அப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதோடு ஜாதியின் பெயரை உணவகத்திற்கு வைக்கும் அளவிற்கு இந்தியச் சமூகங்கள் எந்தளவிற்குச் சாதிவெறி கொண்டவையாக உள்ளது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பிராமண உணவகம் குறித்த புகைப்படங்கள் மற்றும் ட்விட்டர் கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, பல்வேறு விவாதத்திற்கும் ஆளாகியுள்ளது. ட்விட்டர் பயனர் ஒருவர், உணவகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சமூகத்தின் பெயரைப்பார்க்கும் போது, என்னுடைய சிறுவயதில், பள்ளிப்பருவக்காலத்தில் சாதி சார்ந்து இருந்ததை நினைவுகூருவதாகத் தெரிவித்திருந்தார். மேலும் பிராமண உணவுகள் என்று எதுவும் இல்லை எனவும், பிராமண உணவு என்று தனித்துவ படுத்துவது வெறும் சாதியைச் சார்ந்தே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உணவகத்திற்கு ஆன்லைன் மார்க்கெட்டிங் பிடிப்பதற்காக இது போன்று பெயர் வைத்துள்ளது சாதியைச் சார்ந்து காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உணவகத்திற்கு இப்படி வைத்துள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்பது போன்ற கருத்துக்களையும் ட்விட் செய்துவருகின்றனர்.
Also Read:Whatsapp-ன் புதிய வசதி... பயனாளர்களின் பிரச்னைகளுக்கான மிகப் பெரிய தீர்வு
இது போன்று பல்வேறு விவாதத்திற்கும், சர்ச்சைக்கும் ஆளாகி உணவகத்தின் பெயர்கள் பெங்களூருவில் வைக்கப்படுவது. இது முதல் முறை அல்ல. கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த உணவகம் ஒன்று சுத்தமான பிராமண மதிய உணவு சேவை ( A pure Brahmin lunch box service) என்ற தொடங்கியது. இதுகுறித்த விளம்பரம் ஒன்றைப் புகைப்படத்தோடு வழக்கறிஞரும் ஆர்வலருமான மருத்துவர். பி கார்த்திக் நவயானா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அப்போதும் நெட்டிசன்களிடம் பெரும் விவாதப்பொருளாக இருந்தது. மேலும் ஜே.பி. நகர் மற்றும் பி.டி.எம். லேஅவுட், புத்தேனஹள்ளி, பிலேகஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்படப் பெங்களூரின் பல பகுதிகளில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட ‘தூய பிராமண’ உணவை வெளிப்படையாக டெலிவரி செய்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே இனிவரும் காலங்களிலாவது இது போன்று சாதியை முன்னிறுத்துவதுபோன்ற பெயர்களை வைப்பது தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangalore, Caste, Restaurant