மனித வாழ்க்கை என்பதே ஒரு புரியாத புதிர் தான். மனிதன் இறந்த பின்னர் என்ன ஆகும் என்பது பற்றிய கேள்விகளுக்கு இன்று வரை பல அனுபமானங்களை வைத்திருந்தாலும் உறுதியாக நிரூபித்தது என்று எதுவும் இல்லை. அப்படி ஒரு புதிய தியரியை தான் இப்போது விஞ்ஞானி ஒருவர் முன்வைத்துள்ளார். மரணம் என்பது ஒரு முடிவில்லை. அது நமது மனதின் மாயை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மதமும் இறப்பை குறித்த லட்சக்கணக்கான கதைகளை சொல்கிறது. மறுபிறவி, மோட்சம், இறவாமை என்று நிறைய சொல்கிறார்கள்.ஆனால், இவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், ஒரு அமெரிக்க மருத்துவர் மற்றும் விஞ்ஞானி, ராபர்ட் லான்சா , அவரது புத்தகமான பயோசென்ட்ரிசம், இறப்பு உண்மையில் முடிவில்லாத எண்ணிக்கையிலான பிரபஞ்சங்களுக்கு ஒரு கதவாக இருக்கலாம் என்று கூறுகிறார்.
அஸ்டெல்லாஸ் குளோபல் ரீஜெனரேட்டிவ் மெடிசின் தலைவராகவும், அஸ்டெல்லாஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் ரிஜெனரேட்டிவ் மெடிசின் தலைமை அறிவியல் அதிகாரியாகவும் விளங்கும் ராபர்ட் லான்சா. ஸ்டெம் செல்கள் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர். சமீபத்தில் குவாண்டம் மெக்கானிக்ஸ் மற்றும் வானியற்பியல் துறைகளிலும் ஆராய்ச்சி செய்து வருகிறார். அதன் விளைவாகத்தான் பயோசென்ட்ரிஸம் என்ற புதிய கோட்பாட்டைக் கொண்டு வந்தார். அனைத்து உடல் சாத்தியக்கூறுகளிலும் விளையும் வகையான ஒரு பொறிமுறை தான் வாழ்க்கை சுழற்சி என்கிறார். மனிதனைப் படைத்தது பிரபஞ்சம் அல்ல. நமக்குத் தெரிந்தபடி பிரபஞ்சத்தைப் அமைத்தது நாம்தான் என்ற தியரியை அடிப்படையாக வைத்துள்ளார்.
எப்படி மொழிக்கு வார்த்தைகளை பயன்படுத்துகிறோமோ அதே போல தான் வாழ்க்கை சுழற்சிக்கு இடம் மற்றும் நேரம் கருவிகளாக இருக்கிறது. சொல்லப்போனால் நம் மூளை தான் இறப்பு என்ற மாயையை உண்மை என்று நம்புகிறது. ஆனால் மரணம் என்பது பிரபஞ்சம் எனும் ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒரு சீரிஸை பார்த்து முடிப்பது போன்றது தான். பிரபஞ்சத்தின் வெவ்வேறு கதைகள், வெவ்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் வெவ்வேறு முடிவுகளை நீங்கள் அனுபவிக்க முடியும். அவை அனைத்தின் முடிவிலும், இறுதியாக நீங்கள் மட்டும் தான் இருப்பீர்கள். வாழ்க்கை சுழற்சியும் அப்படி தான் நடக்கிறது என்கிறார். வாழ்க்கை மாறினாலும் உயிரின் நிலை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
அவரைப் பொறுத்தவரை, இயற்பியல் விதிகளின்படி, ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது, அது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுகிறது. நாம் இறக்கும் போது, நேரங்கள் முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் வேறொரு இடத்தில் வேறு உருவத்திற்கு மாறிவிடுகிறது. புதிய ஒரு இணைப்பு உருவாவதால் மரணம் என்பது நிகழ்வதில்லை என்கிறார். ஏற்கனவே இருக்கும் லட்சக்கணக்கான தியரிகளை போலவே இருந்தாலும் இதையும் இன்னும் நிரூபிக்கவில்லை.
இதையும் படிங்க: கட்டணம் வசூலிக்கப் போகுதா கூகுள்...? பர்ஸை பதம் பார்க்கும் ChatGPT..?
லான்சா டைம் இதழின் 2014 "உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்கள்", ப்ராஸ்பெக்ட் இதழின் 2015 "சிறந்த 50 உலக சிந்தனையாளர்கள்", மார்க்விஸ் ஹூஸ் ஹூ 2018 வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். 2010 நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) இயக்குனர் விருது “ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.