அமரேந்திர பாகுபலியாக டேவிட் வார்னர் - அடுத்த கலக்கல் டிக்டாக் வீடியோ

சமீப காலமாக இவர் செய்யும் டிக்டாக் வீடியோ பதிவுகள் வைரலாகி வருகிறன

அமரேந்திர பாகுபலியாக டேவிட் வார்னர் - அடுத்த கலக்கல் டிக்டாக் வீடியோ
சமீப காலமாக இவர் செய்யும் டிக்டாக் வீடியோ பதிவுகள் வைரலாகி வருகிறன
  • Share this:
அல்லு அர்ஜூன் நடித்த படத்தின் பாடல்களுக்கு டிக்டாக் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது பாகுபலி பட டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை.

அதனால் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் இருந்தபடியே வார்னர் டிக்டாக் செய்து வருகிறார். சமீப காலமாக இவர் செய்யும் டிக்டாக் வீடியோ பதிவுகள் வைரலாகி வருகிறது.


இவர் ஏற்கனவே, அல்லு அர்ஜுனின் அல வைகுந்தபரம்லு படத்தில் இருந்து புட்ட பொம்மா பாடலுக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் டிக்டாக் செய்து அசத்தினார்.
@davidwarner31Oh dear here we go!! First attempt haha. ##buttabomma @candywarner31

♬ original sound - SwAmy PriyAzz💕தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து, உலகளவில் பிரபலமான பாகுபலி படத்தில் அமரேந்திர பாகுபலி ஆகிய நான்' என்ற வசனத்தை பாகுபலி கெட்டப்பில் டிக்டாக் செய்து அசத்தி உள்ளார்.அதில் போர் வீரனைப் போன்று வார்னர் தோன்ற, அவரது மகள் எதிரியாக நிற்பது போல் படம்பிடிக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
View this post on Instagram
 

Guess the movie!! @sunrisershyd


A post shared by David Warner (@davidwarner31) on
First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading