பொருளாதார ஏற்றத், தாழ்வுகள் நிறைந்த உலகம் இது. நம்மை சுற்றியுள்ள மருத்துவர், பொறியாளர், தொழிலதிபர்கள், பெரும் நிறுவனங்களின் அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் என உயர்மட்ட அளவில் சிலர் இருப்பார்கள். அதே சமயம், ஆட்டோ டிரைவர், டாக்ஸி டிரைவர், சுமை தூக்குவோர், டீ கடைக்காரர், கடைநிலை ஊழியர் என விளிம்பு நிலையில் உள்ளவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நமது பணி எப்படியாயினும் நம் பிள்ளைகள் விரும்பியதை செய்து கொடுக்க வேண்டும், அவர்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே நமது கனவாக இருக்கும். அதே சமயம், நாம் சாதாரண வேலையில் இருப்பதால் நம் பிள்ளைகள் விரும்பிய அனைத்தையும் செய்து கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அல்லது குற்ற உணர்ச்சி சிலருக்கு இருக்கும்.
இந்த செய்தியும் அதுபோல ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள மொஹுயா என்ற பதிவாளர் கடந்த ஜனவரி மாதத்தில் இந்த வீடியோ பதிவை பகிர்ந்து கொண்டார். அந்தப் பதிவை, குட்நீயூஸ் மூம்மெண்ட் என்ற அமைப்பின் பக்கத்தில் தற்போது மீண்டும் பகிர, அது வைரல் ஆகியுள்ளது.
என் தந்தை கடும் உழைப்பாளி :
இன்ஸ்டாகிராம் பதிவில் தனது இளமைக்கால அனுபவங்களை அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். அதில், “நான் பிறந்து, வளர்ந்த பகுதியில், பல குழந்தைகளின் பெற்றோர் நல்ல நிலைமையில் சம்பாதிக்கக் கூடியவர்களாக இருந்தனர். நாம் என்ன பணி செய்கிறோமோ, அதைப் பொறுத்துதான் நமது ஸ்டேடஸ் அமையும் என்ற பிம்பம் நிலவுகிறது. அது உண்மையல்ல.
எங்கள் ஏரியாவில் இருந்த மற்ற பெற்றோருடன் என் தந்தையை ஒப்பிட முடியாது என்பது எனக்கு தெரியும். ஆனால், எங்கள் குடும்பத்திற்காக மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டவர் அவர். ஆனால், அவரைப் பற்றி நான் பெருமை கொள்கிறேன் என்பதையே சொல்ல விரும்புகிறேன். பணி நிமித்தமாக சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சென்று, மீண்டும் சூரிய அஸ்த்தமனத்திற்குப் பிறகு வீடு திரும்பும் அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்.
Read More : இறந்து கரை ஒதுங்கிய கர்ப்பமாய் இருந்த ஹேமர்-ஹெட் சுறா; சோகத்தில் மூழ்கிய விஞ்ஞானிகள்!
கோபமாக நடந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் குறித்து எந்தவித புகாரும் கூறாத அவர் பாராட்டுக்குரியவர். எங்களுக்காக பல தியாகங்களைச் செய்தவர். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே இன்றைக்கு அமெரிக்காவில் நல்ல நிலையில் நான் இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் போதும் அப்பா
இளைமைக் காலத்தில், டாக்ஸி டிரைவராக இருப்பது குறித்து தன் தந்தை தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும், “மற்ற குழந்தைகளின் தந்தையைப் போல நான் மருத்துவரோ அல்லது பொறியாளரோ அல்ல, அதற்காக என்னை மன்னிக்க வேண்டும்’’ என தந்தை சொன்னாராம். அதற்கு இந்தப் பெண் “நீங்களே போதும் அப்பா’’ என்று பதில் அளித்தாராம்.
https://www.instagram.com/p/CcbRF3MFawR/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
இணையத்தில் தற்போது இந்த வீடியோ டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதைப் பார்த்துள்ளனர். இதற்கு நெட்டிசன் ஒருவர் அளித்துள்ள பதிலில், “டாகிஸ் டிரைவர்கள் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பது தெரியுமா? மாபெரும் நகரில் காலை 3.30 மணிக்கே பணிக்கு புறப்பட்டு செல்லும் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்வது அவர்கள் தான். உங்கள் தந்தையை நான் நேசிக்கிறேன் என சொல்லுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.