மாமியாருக்கு 2 நாட்கள் பாய்ஃபிரண்ட் தேவை - மருமகள் கொடுத்த விளம்பரத்தால் அதிர்ச்சி

மாதிரி படம்

நியூயார்கில் உள்ள ஹட்சனில் வசிக்கும் அந்த பெண் 51 வயதான தனது மாமியாருக்காக இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளார்.

 • Share this:
  சமீபத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாருக்கு பாய்ஃபிரண்ட் தேவை என்று கொடுத்த விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

  அமெரிக்காவில் மருமகள் ஒருவர் 40 - 60 வயதுக்குள் இருக்கும் ஒருவர் தனது மாமியாருக்கு பாய்ஃபிரண்டாக இருக்க வேண்டுமென விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும் பாய்ஃபிரண்டாக வருபவர் 2 நாட்களுக்கு மட்டுமே என்று ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்காவின் பிரபல விளம்பர வலைத்தளமான கிரெய்க்ஸ்லிஸ்டில் தான் இது வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபருக்கு 960 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.72,000) செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : 6,300 அடி மலை உச்சியில் ஊஞ்சல் விளையாட்டு... பெண்களுக்கு நேர்ந்த விபரீதம் - அதிர்ச்சி வீடியோ

  நியூயார்கில் உள்ள ஹட்சனில் வசிக்கும் அந்த பெண் 51 வயதான தனது மாமியாருக்காக இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளார். மேலும் அந்த நபருக்கு டான்ஸ், கவரும்படியான பேச்சுதிறன் இருக்க வேண்டும் என்றுள்ளார்கள். இந்த விளம்பரத்திற்கு காரணம் மாமியார் தனிமையாக இருக்க கூடாது என்பதற்காவே கொடுக்கப்பட்டுள்ளது.

  Also Read : மணமேடையிலேயே தூங்கிய மணமகன்... தட்டி எழுப்பும் உறவினர்கள் - வைரலாகும் வீடியோ!

  அந்த பெண் 2 நாட்களுக்கு கணவருடன் வெளியூர் செல்ல உள்ளதால் மாமியார் தனிமையில் இருப்பதை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை என்பதால் இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்திற்கு தற்போது ஏகப்பட்ட டிமாண்ட் இருப்பதாக தெரிய வந்துள்ளது.  கரும்பு திங்க கூலி என்பது போல் 2 நாட்கள் டேட்டிங் செய்ய 1000 டாலர் என்பதால் பலரும் இந்த விளம்பரத்திற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: