ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Great Escape: தீ விபத்தில் இருந்து தப்பிய பூனை.... வைரல் வீடியோ!

Great Escape: தீ விபத்தில் இருந்து தப்பிய பூனை.... வைரல் வீடியோ!

தீ விபத்தில் இருந்து தப்பிய பூனை

தீ விபத்தில் இருந்து தப்பிய பூனை

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த குடியிருப்பின் ஜன்னலில் இருந்து கருப்பு நிற பூனை ஒன்று குதித்தது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 5வது மாடியில் இருந்து குதித்து தப்பிய பூனையின் வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேறினர். அப்போது, தீ விபத்துக்குள்ளான மாடியில் சிக்கிக்கொண்ட பூனை ஒன்று தப்பிப்பதற்காக அலைமோதியுள்ளது. சிறிது நேரத்தில் தீ மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவி புகைமூட்டம் சூழத் தொடங்கியது. அப்போது கீழே இருந்தவர்கள் பலரும் தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தை செல்போன்களில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த குடியிருப்பின் ஜன்னலில் இருந்து கருப்பு நிற பூனை ஒன்று குதித்தது. கீழே இருந்து இதனைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். பூனை குதித்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி மிகப்பெரிய தடுப்பு சுவர் இருந்தது. அந்த சுவரின் மீது பூனை விழுந்துவிடுமோ? என அங்கிருந்தவர்கள் அஞ்சினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக தடுப்புச்சுவரையும் லாவகமாக தாண்டி, பசுந்தரையில் பூணை லேண்டானது.

பூனையின் இந்த ஜம்ப், அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. எந்தவித காயமும் படாமல் தப்பித்தது மகிழ்ச்சியளிப்பாக கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சிகாகோ தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பூனை குதித்த வீடியோவை தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். பூனை குறித்து பேசிய வீட்டின் உரிமையாளர், அதற்கு ஹென்னெஸ்னே என பெயரிட்டு அழைத்து வந்ததாக தெரிவித்தார். தீ விபத்து ஏற்படும்போது குடியிருப்பில் இருந்து அனைவரும் வெளியேறிதாக கூறிய அவர், அவசரத்தில் பூனையை மறந்துவிட்டதாக கூறினார்.

பூனையை குறித்து தாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஜன்னலில் இருந்து எகிறி குதித்து. 5வது மாடியில் இருந்து குதிக்கும்போது, ஏதேனும் அடிபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என தாங்கள் நினைத்து கவலைப்பட்டதாகவும், அங்கு தடுப்பு சுவர் ஒன்று இருந்ததால், அதன் மீது விழுந்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் கூறினார். நல்லவேளையாக பசுந்தரையில் குதித்தது தப்பியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த வீட்டின் உரிமையாளர், தற்போது அதனைக் காணவில்லை என கூறியுள்ளார். தீ விபத்து நடந்துபோது தப்பிய பூனை எங்கே சென்றது என தெரியவில்லை எனவும், அதனை தேடிக்கொண்டிருப்பதாக டிவிட்டரில் கூறியுள்ளார்.

Also read... Driving Stunt: விதிமீறி கார் ஓட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் அமெரிக்காவில் கைது!

பூனை தப்பிய வீடியோவை பலரும் லைக் செய்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், பூனையை கண்டுபிடிக்க தங்களின் ஐடியாக்களையும் பகிர்ந்துள்ளனர். வீட்டு பூனை என்பதால், எங்கும் சென்றிருக்க வாய்ப்புகள் இல்லை, பயத்தினால் அருகில் உள்ள ஏதேனும் ஒரு புதரில் தங்கியிருக்க வாய்ப்புகள் என்று என நெட்டிசன்கள் கூறியுள்ளனர். தீ விபத்து குறித்து விளக்கமளித்த தீயணைப்புத்துறை, சமையலைறயில் ஏற்பட்ட தீ என்றும், தகவலறிந்து வந்து 15 நிமிடத்தில் கட்டுப்படுத்தி சேதத்தை தவிர்த்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Cat