முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஆபத்தானப் பயணம் வேண்டாம்.. கோவா ஆற்று வெள்ளத்தில் தார் காரில் பயணித்தவரை எச்சரித்த ஆனந்த் மஹிந்திரா!

ஆபத்தானப் பயணம் வேண்டாம்.. கோவா ஆற்று வெள்ளத்தில் தார் காரில் பயணித்தவரை எச்சரித்த ஆனந்த் மஹிந்திரா!

ஆற்று வெள்ளத்தில் தார் காரில் பயணித்தவரை எச்சரித்த ஆனந்த் மஹிந்திரா!

ஆற்று வெள்ளத்தில் தார் காரில் பயணித்தவரை எச்சரித்த ஆனந்த் மஹிந்திரா!

Anand Mahindra : தனது டிவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா, கோவாவில் உள்ள ஒரு ஆற்றில் இரண்டு தார் எஸ்யூவிகள் அதிக நீரோட்டத்தில் இயக்கப்படும் வீடியோவைப் பார்க்கும் போது அச்ச உணர்வு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கோவாவில் உள்ள ஆற்றில் வெள்ளத்தில் வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறும், ஆபத்தானப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் உபயோகிக்கும் கார்கள் என்றால் அது மஹிந்திரா குழுமத்தின் படைப்பாகத் தான் இருக்கும். இந்நிறுவனமும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது புது விதமான மற்றும் பல்வேறு அம்சங்களுடன் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2020 ஆம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்திய தார் கார் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

தார் கார் 10 வேரியண்ட்டுகளில் 2 விதமான வண்ணங்களில் கிடைப்பதோடு, ஆஃப்-ரோடிங் திறன்களையும் 4X4 டிரைவ் திறன்களுடன் வருகிறது. கடந்த ஜூன் 2022 ல் மஹிந்திரா நிறுவனம் 3640 யூனிட் எஸ்யூவிகளை விற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள கார்களை மக்கள் வாங்கும் போது நிச்சயம் மஹிந்திரா குழுமம் மகிழ்ச்சியடைய தான் செய்யும். ஆனால் அதற்கு மாறாக தார் கார் உரிமையாளர்களை கட்டுப்பாட்டுடன் செல்ல ஆனந்த் மஹிந்திரா டிவிட் வாயிலாக அறிவுறுத்தியதோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா, கோவாவில் உள்ள ஒரு ஆற்றில் இரண்டு தார் எஸ்யூவிகள் அதிக நீரோட்டத்தில் இயக்கப்படும் வீடியோவைப் பார்க்கும் போது அச்ச உணர்வு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கார் நல்ல கன்டிசனுடன் செயல்பட்டாலும் தார் கார் ஓட்டும் உரிமையாளர்கள் வாகனம் ஓட்டும் போது சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் தார் கார் மீதான அவர்களின் நம்பிக்கையைப் பாராட்டினாலும், ஆற்று வெள்ளத்தின் பயணம் என்பது மிகவும் ஆபத்தானது என எச்சரித்துள்ளார்.

இந்த வீடியோவை இணையத்தில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பார்வையாளர்கள் பார்த்துள்ளதோடு, பல எதிர்மறையாக கருத்துக்களையும் ட்விட் செய்துள்ளனர். ஆனந்த் மஹிந்திராவின் ட்விட் வீடியோவுக்குப் பதிலளித்த யூசர் ஒருவர், இப்படி ஆபத்தான பயணம் மேற்கொள்வது உண்மையிலேயே முட்டாள் தனமானது என்றும் வாகனம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், மனித கண்ணுக்குத் தெரியாத, ஓடும் நீர் நிச்சயம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு யூசர் ஒருவர் பைத்தியக்காரத்தனத்திற்கு ஒரு வரம்பு உள்ளது, இது அதற்கு அப்பாற்பட்டது மற்றும் நிச்சயமாக எந்த வகையிலும் இவர்கள் பெரும் ஆபத்தை சந்திப்பார்கள்... மிகவும் ஆபத்தான பயணம் இது தான், அட கடவுளே இப்படியுமா? என்பது போன்ற கமெண்ட்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

எத்தனைத்தான் வாகனம் ஓட்டுவதில் சிறந்தவராக இருந்தாலும் இயற்கை சீற்றங்களுக்கு கொஞ்சம் பயந்து தான் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் வைரலாகிறது. மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தனது வேலையில் மட்டுமில்லாமல், ட்விட்டரிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். குறிப்பாக இந்தியா மற்றும் உலகில் நடக்கும் சுவாரஸ்சியமான விஷயங்களை ட்விட்டரில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Anand Mahindra, Trending