• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மகனுடன் ‘மாரி’ பட பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட தந்தை - வீடியோ

மகனுடன் ‘மாரி’ பட பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட தந்தை - வீடியோ

தனுஷ் | ரிக்கி பாண்ட்

தனுஷ் | ரிக்கி பாண்ட்

மாரி பட பாடலுக்கு தனது மகனுடன் நடனமாடி அசத்தியுள்ளார் ரிக்கி பாண்ட்

  • Share this:
சமீப காலமாக இந்தியாவில் வெளியாகும் சில படங்கள் மற்றும் அதன் பாடல்கள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக இணைய வாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பல இணையவாசிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உலக அளவில் ஹிட் கொடுக்கும் பாடல்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த பட்டியலில் தமிழ் பாடல்களும் அடங்கும்.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் இந்திய திரையுலகில் கொடிகட்டி பறக்கும் சில பாடல்களுக்கு தனது குடும்பத்தினருடன் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டு பிரபலமைடைந்து வருகிறார். அதிலும், அந்த இசைக்கு ஏற்ப அவரது நடன அசைவுகள் அனைத்தும் ஒத்திருப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வாஷிங்டனைச் சேர்ந்த கிராஃபிக் டிசைனர் தான் ரிக்கி பாண்ட் (Ricky Pond). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடும் வீடியோவை பதிவிட்டு வருகிறார். இவரது வீடியோக்கள் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டது.

இவர் தனது மகள் மற்றும் மகனுடன் நடன வீடியோக்களை பதிவிட்டு வந்ததால், இணைய வாசிகளால் ‘டான்சிங் டாட்’ (Dancing Dad) என்று அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் இவரது ரசிகர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்கள் பரிந்துரைக்கும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார். அதன்படி, இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் வரும் பாடலுக்கு மகனுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ அதிக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by Ricky L. Pond (@ricky.pond)





இதுதவிர இவர் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், லாலிபாப் என்ற ஒரு போஜ்புரி பாடல் இணையத்தில் மிகவும் பிரபலமடைந்தது. இந்த பாடலுக்கு அவர் தனது மகளுடன் இணைந்து நடமாடிய வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ 2 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு இருபத்தொன்பது ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by Ricky L. Pond (@ricky.pond)





இது தவிர பஞ்சாபி பாடலான படோலா மற்றும் ஆஜா மஹி வே என்ற இந்தி பாடல்களுக்குன் நடனமாடியுள்ளார் ரிக்கி பாண்ட். இவரின் சிறப்பம்சம் என்னவென்றால், அந்தந்த இசைகளுக்கு ஏற்றாற்போல் அவரது நடனம் அமைந்திருக்கும். இது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.



 




View this post on Instagram





 

A post shared by Ricky L. Pond (@ricky.pond)






 




View this post on Instagram





 

A post shared by Ricky L. Pond (@ricky.pond)






Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: