19 குட்டிகளை ஈன்று நாய் சாதனை..!

10 ஆண் குட்டி ஒன்பது பெண் குட்டிகள்.

news18
Updated: July 30, 2019, 6:37 PM IST
19 குட்டிகளை ஈன்று நாய் சாதனை..!
19 குட்டிகள்
news18
Updated: July 30, 2019, 6:37 PM IST
ஆஸ்திரேலியாவில் டால்மேஷியன்ஸ்( Dalmatians ) நாய் 19 குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்றுள்ளது. அதை வீடியோவாக வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தற்போது தாயுடன் சேர்த்து தன் வீட்டில் 20 டால்மேஷியன் நாய்கள் இருப்பதாகப் பெருமைக் கொள்கிறார் உரிமையாளர் மெலிஸா. அது கர்ப்பமாக இருந்தபோது 15 கிலோ எடை கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

” கர்ப்பமாக இருந்த போது மெலோடியின் வயிறு பெரிதாக இருந்தது ஆனால் இத்தனைக் குட்டிகளைக் கொண்டிருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது என்று உரிமையாளர் மெலிஸா கூறியுள்ளார். இதற்கு பிரசவம் பார்ப்பதற்கு மட்டும் 8 பேர் உடன் இருந்ததாக கூறியுள்ளார். அதிக குட்டிகள் வயிற்றில் இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குட்டிகளில் 10 ஆண் குட்டி ஒன்பது பெண் குட்டிகள் பிறந்துள்ளன.

தற்போது 19 குட்டிகளுக்கும் பெயர் வைக்கும் படலம் நடந்து வருகிறது. குழந்தைகளின் கார்டூன் படங்களில் வரும் பிரபலமான கார்டூன் கதாபாத்திரங்களின் பெயர்களை வைக்க முடிவு செய்துள்ளதாக மெலிஸா கூறியுள்ளார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...