• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஐ.ஐ.டி பயிற்சி நிறுவனத்தில் சேர இருந்த மகனை காப்பாற்றிய தந்தை - நெட்டிசன்களை கவர்ந்த ட்விட்டர் ஸ்டோரி!

ஐ.ஐ.டி பயிற்சி நிறுவனத்தில் சேர இருந்த மகனை காப்பாற்றிய தந்தை - நெட்டிசன்களை கவர்ந்த ட்விட்டர் ஸ்டோரி!

மாதிரி படம்

மாதிரி படம்

நம் நாட்டில் இருக்கும் ஐ.ஐ.டி-க்கள் இந்திய இன்ஜினியரிங் ஆர்வலர்களுக்கு நன்கு செட்டில் ஆகும் வாழ்க்கைக்கான ஒரு டிக்கெட்டாக இருக்கிறது.

  • Share this:
மெஷின் போல சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் பலருக்கு தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட கூட முடிவதில்லை. எந்நேரமும் வேலை, வேலை என்றே பலரும் ஓடி கொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள் வாழ்வாதாரத்திற்காக ஓடி கொண்டிருக்கிறார்கள் என்றால், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மட்டும் என்ன வேடிக்கை பார்ப்பதற்காகவா பிறந்திருக்கிறார்கள் என்று தங்களுக்கு சரிசமமாக படிப்பதற்காக ஓட வைக்கும் பெற்றோர்களே இங்கு அதிகம். படிப்பு தான் எல்லாம் என்று குழந்தை மற்றும் இளமை பருவத்தை ரசித்து, விளையாடி மகிழ விடாமல் குதிரைக்கு லாடம் கட்டுவது போல தங்கள் குழந்தைகளின் கண் முன்னால் கல்வி புத்தகங்களை கட்டி தொங்க விடும் பெற்றோர்கள் பெருகியுள்ளதை பார்த்து பரிதாபமே மேலோங்குகிறது.

நம் நாட்டில் இருக்கும் ஐ.ஐ.டி-க்கள் இந்திய இன்ஜினியரிங் ஆர்வலர்களுக்கு நன்கு செட்டில் ஆகும் வாழ்க்கைக்கான ஒரு டிக்கெட்டாக இருக்கிறது. இதில் சேர்வதற்காக மாணவர்கள் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் கடின உழைப்பு அவர்களது வாழ்க்கையின் சிறந்த அத்தியாங்களை விலக்கி விடுகிறது என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் தேவையில்லை. படித்து வாழ்வில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து விட்டு, மற்ற எல்லாவற்றையும் கைவிட கட்டாயப்படுத்துகின்றன இது போன்ற மாபெரும் கல்வி நிறுவனங்கள். இருப்பினும் ட்விட்டர் யூஸர் ஒருவர் கல்வி நிறுவனம் ஒன்றில் சேருவதற்காக சென்று தந்தையின் முடிவால் அங்கிருந்து திரும்பிய கதையை கூறி உள்ளார்.

Also read:    மணமகன் செய்தித்தாளை படிக்காததால் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

இந்த ஸ்டோரி நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நிஷாந்த் ஜெயின் என்ற அந்த யூஸர் இதுபற்றி கூறுகையில், போட்டித் தேர்வுகளுக்கான கல்வி நிறுவனமான FIITJEE-ல் சேர இருந்த என்னை என் தந்தை காப்பாற்றி விட்டார். நான் அங்கு சேர்வதற்கான சேர்க்கை கட்டணம் செலுத்த நாங்கள் இருவரும் ஒன்றாக சென்றிருந்தோம். கோச்சிங் நேரம் தவிர்த்து நாளொன்றுக்கு 5 முதல் 6 மணி நேரம் ஹோம்வொர்க் கொடுக்கப்படும். உங்கள் மகன் சிறப்பாக படிக்க முடியும். எல்லோரும் இங்கே இதை தான் பின்பற்றுகிறார்கள் என்று அங்கிருந்த ரிஷப்ஷனிஸ்ட் கூறினார்.

Also Read:   Renault Duster 2021 Launch: மாஸ் லுக்கில் ரெனால்ட் டஸ்டர் 2021 அறிமுகம்: அப்படி என்ன மாற்றம்?

அவர் சொன்ன டைம்டேபிளில் விளையாட்டிற்கோ அல்லது வேறு ஏதாவது ஆர்வமான செயல்களை மாணவர்கள் செய்வதற்கோ துளி கூட நேரம் ஒதுக்கப்படவில்லை. ரிஷப்ஷனிஸ்ட் பெண்மணி கூறியதை பொறுமையாக கேட்ட என் தந்தை, ஆனால் என் மகன் பேட்மிண்டன் விளையாடுவான் அதற்கு எங்கே நேரம்.! என்ற தொனியில் கேள்வி கேட்டார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அந்த பெண்மணி திணறினார். தொடர்ந்து என் தந்தை சேர்க்கை கட்டணம் செலுத்தாமலே என்னை அழைத்து கொண்டு வீடு திரும்பினார். ரிசல்ட்: எந்தவொரு டியூஷனுக்கும் போகாத ஒரே மாணவனாக இருந்து 11 மற்றும் 12-ம் வகுப்பை படித்து முடித்தேன். நான் படித்தேன் கூடவே blog-ல் எழுதினேன்,விளையாடினேன். எனக்கு நிறைய நேரம் இருந்தது.."அது நான் யார் என்று என்னை நானே கண்டறிய உதவியது. உலகின் சிறந்த இடங்களில் ஒன்றிலிருந்து பொறியியல் துறையில் முதுகலை பெற்றேன். நான் 11-ஆம் வகுப்பில் துவங்கிய ஒரு blog பின் ஒரு வெப்காமிக் ஆனது. அந்த வெப்காமிக் ஸ்னீக்கி ஆர்ட்டுக்கு வழிவகுத்தது. நான் எழுதுவதை நிறுத்தவில்லை. இது அனைத்திற்கும் காரணம் என் நலன்களை தியாகம் செய்ய கூடாது என்று அன்றைய தினம் என் தந்தை எடுத்த ஒரு முடிவு தான். எல்லோரும் ஒரு செயலை செய்கிறார்கள் என்பதற்காக நமக்கு பிடித்த நியாயமானவற்றை தியாகம் செய்யக்கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன் - இதை என் தந்தை தான் எனக்கு கற்றுக் கொடுத்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நல்லவர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று கூறி கதையை முடித்துள்ளார் நிஷாந்த் ஜெயின். இதற்கு ரியாக்ட் செய்துள்ள நெட்டிசன்கள், உத்வேகம் தரும் ஒரு கதை. எப்போதும் மனது என்ன சொல்கிறதோ அதை கேட்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் உங்கள் வாழ்க்கை இருக்கிறது என்றும் தங்களது பிள்ளைகளுக்கும் இதே போன்ற சூழலை ஏற்படுத்தி உள்ளதாக சிலரும் கமெண்ட்ஸ் செய்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: