குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் திரும்பி வரும் வரையிலும் பெற்றோரின் மனமும், சிந்தனையும் அவர்களை நோக்கியே இருக்கும். நம் குழந்தை இப்போது பள்ளியில் என்ன செய்து கொண்டிருக்கும், மத்திய குழந்தை சாப்பிட்டதா, இல்லையா, பள்ளியில் யாரும் நம் பிள்ளையை திட்டி விடக் கூடாது என பெற்றோரின் கவனம் முழுக்க பிள்ளைகளை நோக்கியே இருக்கும்.
அதுவும் குழந்தை ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தால், நிச்சயமாக பெற்றோர் ஒவ்வொரு நிமிடமும் தவிப்புடன் தான் இருப்பார்கள். அதே சமயம், வாய்ப்பு கிடைத்தால் பள்ளிக்கு சென்று குழந்தையை பார்த்துவிட்டு, குழந்தை எப்படி படிக்கிறது, சேட்டை எதுவும் செய்கிறதா என்று பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்து வருவது உண்டு.
தினம், தினம் காலையிலும், மாலையிலும் வீட்டில் பார்த்த அதே அப்பா, அம்மா தான் பள்ளிக்கு வந்துள்ளனர் என்றாலும் கூட, அதையறிந்த பிள்ளைகள் ஏதோ பெற்றோரை முதல் முறை பார்ப்பது போல துள்ளிக் குதித்து விடுவார்கள். அன்றைய தினம் வகுப்பு முழுவதும் உள்ள தன்னுடைய நட்பு வட்டத்தில், “இன்னைக்கு எங்க அப்பா வந்தாரு தெரியுமா, இன்னைக்கு எங்க அம்மா வந்தாங்க தெரியுமா’’ என்று குதூகலமாக பேசிக் கொண்டிருப்பார்கள்.
பார்வையற்ற மகனை பார்க்க..
இன்ஸ்டாகிராம் தளத்தில், இதுபோல பள்ளிக்கு சென்று மகனை பார்க்கும் தந்தையின் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இதில் நம் மனதை உருக செய்யும் விஷயம் என்ன என்றால், அந்தச் சிறுவனக்கு கண் பார்வை தெரியாது என்பது தான்.
பள்ளியில் எப்போதும் போல மதிய உணவு சாப்பிட்ட பிறகு, தன்னுடைய வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வராண்டாவில் சாதாரணமாக நடந்து வருகிறான் இந்தச் சிறுவன். அந்தச் சமயத்தில், அங்கு காத்திருந்த தந்தை மகனை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.
வீடியோவின் பின்னணியில் அவர் பேசுகையில், “நான் வந்திருப்பது தெரியாமல் அவன் என்னை கடந்து சென்று கொண்டிருக்கிறான்’’ என்று கூறுகிறார். சற்று நேரத்தில் மகனை மெல்லிய குரலில் அவர் அழைக்கிறார். சிறுவனின் புத்திகூர்மை இது தந்தையின் குரல் என்பதை பட்டென்று புரிந்து கொள்கிறது. இதைத் தொடர்ந்து, மகிழ்ச்சி பொங்க தந்தையின் குரல் வந்த திசை நோக்கி செல்கிறான் அந்த சிறுவன்.
View this post on Instagram
உருக்கமுடன் பேசிய தந்தை
இந்த நிகழ்வு குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், “என் குரலை கேட்டவுடன், அவன் வெளிப்படுத்திய ஆச்சரியம் எனக்கு மகிழ்ச்சியை தந்தது. அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவன் மிக இனிமையானவன். அவன் முழுவதுமாக கண் பார்வை தெரியாதவன் கிடையாது. எதிர்மறையாக கமெண்ட் செய்பவர்களின் கவனத்திற்காக இதை சொல்ல வேண்டியுள்ளது’’ என்று கூறினார்.
Also see... திருமண வரவேற்பில் இது புதுசு கண்ணா புதுசு - டிராக்டரில் வந்திறங்கிய மணமகள்!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மே 17ஆம் தேதி வெளியான இந்த வீடியோ சுமார் 39.7 மில்லியன் பார்வைகளைப் பெற்று தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.