டவ்தே புயல் - மும்பை கேட்வே ஆஃப் இந்தியா கட்டிடத்தில் மோதிய பெரிய அலைகள் - வைரல் வீடியோ!

மாதிரி படம் (PTI)

யல் காரணமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான டவ்தே புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவா, டையூ அண்ட் டாமன், குஜராத் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தததால் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. புயல் காரணமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கின. தாதர் இந்து மாதா, பரேல், சயான் காந்திமார்க்கெட், அந்தேரி ஆசாத் நகர், எஸ்.வி. ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. இதன்காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரில் சுமார் 120 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதன்காரணமாக பல இடங்களில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்தன.

இந்த நிலையில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் தாக்தே சூறாவளி பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் கிளிப்புகள் ஆன்லைனில் வெளிவந்தவாறு உள்ளது. இந்த புயலால் குஜராத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, மேலும் மற்ற கடலோர நகரங்களிலும் பேரழிவை ஏற்படுத்தியது. குஜராத் மட்டுமின்றி மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளையும் பாதித்துள்ளது, மேலும் மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா அருகே பெரும் அலைகள் வீசும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது

கேட்வே ஆஃப் இந்தியா நினைவுச்சின்னத்திற்கு அருகிலுள்ள தாஜ்மஹால் ஹோட்டலில் இருந்து இந்த வீடியோவானது எடுக்கப்பட்டுள்ளது. அதில் அரேபிய கடலில் இருந்து கடுமையான அலைகளை நீரில் அமைக்கப்பட்ட உலோகத் தடுப்புகளை தாண்டி வருவதை காணமுடிகிறது. வீடியோவில் இயற்கையின் சீற்றம் காரணமாக பலத்த காற்று வீசுவதை பார்த்து நெட்டிசன்கள் பயணமாக உள்ளதாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

மேலும் மிகக் கடுமையான இந்த சூறாவளி புயல் காரணமாக குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இன்று இந்த புயல் வலுவிழந்துவிட்டது என கூறப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) புயல் காலை 5.30 மணியளவில் குஜராத்தில் 11 கிமீ வேகத்திலும், சவுராஷ்டிரா லேஅவுட்டிலும் நகர்ந்தது என்று கூறியுள்ளது. டவ்-தே புயல் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக 11 மணியளவில் ‘கடுமையான சூறாவளி புயலாக’ மாறி பின்னர் பலவீனமடையக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also read... ஐ.டி வேலையை உதறிய கிஷோர் - மாடு வளர்ப்பு மூலம் ரூ.44 கோடி வருவாய் ஈட்டி அசத்தல்!

அதன்படி நேற்று இரவு 11: 30 மணியளவில், சவுராஷ்டிரா பகுதி அருகே அதிதீவிரம் கொண்ட புயல் தீவிர புயலாக வலுவிழந்து. புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியது. மேலும் சவுராஷ்டிரா, கட்ச், கொங்கன் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் கன மழை பெய்தது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: