Home /News /trend /

Cyclone Nivar | புயலால் சாலைகளில் சாய்ந்த மரங்கள் - நெட்டிசனின் கோரிக்கைக்கு செவிசாய்த்த முதல்வர்..

Cyclone Nivar | புயலால் சாலைகளில் சாய்ந்த மரங்கள் - நெட்டிசனின் கோரிக்கைக்கு செவிசாய்த்த முதல்வர்..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

புயலால் சென்னையில் சாய்ந்து விழும் மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை உடனடியாக நட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெட்டிசன்கள் வைத்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நிவர் புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 300 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவில், கடலூருக்கு தென் கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டு மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு புதுச்சேரி அருகே புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 115 கி.மீ வேகத்தில் இருக்கும்.

    வங்கக் கடலில் உருவாகியிருக்கும் இந்த புயலால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மரங்கள் சாலைகளில் சாய்கின்றன. சென்னையில் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக தமிழக முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டது.

    மேலும் படிக்க: 6 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை.. 14 மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..

    இதைப்பார்த்த நெட்டிசன், ஒருவர் தயவு செய்து மீண்டும் அந்த மரங்களை நட்டு விடுங்கள் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு செவி சாய்த்து உடனடியாக ரிப்ளை செய்த தமிழக முதல்வர், கண்டிப்பாக தம்பி என்று குறிப்பிட்டுள்ளார்.

    நெட்டிசன் வைத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வர் செவி சாய்த்திருப்பது பலரது வரவேற்பையும் பெற்று வருகிறது.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Chief Minister Edappadi Palanisamy, Cyclone Nivar

    அடுத்த செய்தி